கிதான் மக்கள்

From Wikipedia, the free encyclopedia

கிதான் மக்கள்
Remove ads


கிதான் மக்கள் என்பவர்கள் வரலாற்று ரீதீயான, பகுதியளவு மங்கோலிய நாடோடி மக்கள் ஆவர். இவர்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் மங்கோலியா, வடகிழக்கு சீனா மற்றும் உருசிய தூரக் கிழக்கு ஆகிய வடகிழக்கு ஆசியா பகுதிகளில் வாழ்ந்தனர்.

Thumb
கழுகுகளை கொண்டு வேட்டையாடும் கிதான்கள். 9/10ஆம் நூற்றாண்டு.

முன் மங்கோலியர்களில் இருந்து சியான்பே[1][2] வழியாக இம்மக்கள் தோன்றினர். இவர்கள் ஒரு பகுதியளவு மங்கோலிய மொழியான கிதான் மொழியை பேசினர்.[3] லியாவோ அரசமரபின் காலத்தில் இவர்கள் சைபீரியா மற்றும் வடக்கு சீனாவின் பரந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1125ல் சுரசன் படையெடுப்பால் லியாவோ அரசமரபின் வீழ்ச்சிக்கு பிறகு பல கிதான்கள் எலு தஷியின் குழுவை பின்பற்றி மேற்கு நோக்கி சென்றனர். கருப்பு சீனா அல்லது மேற்கு லியாவோ அரசமரபை மத்திய ஆசியாவில் நிறுவினர். இவ்வரசு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு நீடித்தது. பிறகு 1218ஆம் ஆண்டு மங்கோலிய பேரரசிடம் வீழ்ந்தது. வடக்கு லியாவோ, கிழக்கு லியாவோ மற்றும் சீனாவின் பிற்கால லியாவோ, மேலும் பாரசீகத்தின் குத்லுக்-கானிட் அரசமரபு ஆகியவை கிதான்களால் நிறுவப்பட்ட மற்ற அரசுகளாகும்.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads