கினி-பிசாவு

From Wikipedia, the free encyclopedia

கினி-பிசாவு
Remove ads

கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, [ˈgɪni bɪˈsaʊ]; போர்த்துக்கீச மொழி: República da Guiné-Bissau, [ʁɛ'publikɐ dɐ gi'nɛ bi'sau]), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.

விரைவான உண்மைகள் கினி-பிசாவு குடியரசுRepublic of Guinea-BissauRepública da Guiné-Bissau, தலைநகரம் ...
Remove ads

வரலாறு

Thumb
Map Of Guinea Bissau

இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[4] செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது. பரணிடப்பட்டது 2006-01-09 at the வந்தவழி இயந்திரம்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads