மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்
Remove ads

இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2017 ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2018 செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.[1]

Thumb
2017 ஆம் ஆண்டிற்கான கணக்கீடுகளின் அடிப்படையில், செப்டம்பர் 14 ஆம் நாள், 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் வெளியிடப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பற்றிய அறிக்கையின்படி உருவாக்கப்பட்ட உலக நாடுகளின் வரைபடம்.
  ≥ 0.900
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  ≤ 0.399
  தகவல் இல்லை
Thumb
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2017 இன் அடிப்படையில் உலக வரைபடம். செப்டம்பர் 14, 2018 இல் வெளியிடப்பட்டது.[1]
  0.800–1.000 (மிக உயர்நிலை மனித மேம்பாடு)
  0.700–0.799 (உயர்நிலை மனித மேம்பாடு)
  0.555–0.699 (நடுமட்ட மனித மேம்பாடு)
  0.350–0.554 (தாழ்நிலை மனித மேம்பாடு)
  தகவல் இல்லை

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]

இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:

  • மிக உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • நடுத்தர மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • குறைந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்

(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை).

1990 ஆம் ஆண்டில், முதல் முதலாக இந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2012 மற்றும் 2017 ஆண்டுகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டு வந்துள்ளது.

Remove ads

நாடுகளின் முழுமையான பட்டியல்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[1] 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் அறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.

மிக உயர்நிலை மனித மேம்பாடு

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...

உயர்நிலை மனித மேம்பாடு

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...

நடுமட்ட மனித மேம்பாடு

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...

தாழ்நிலை மனித மேம்பாடு

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[1] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  ஐசுலாந்து 0.878
  2.  சப்பான் 0.876
  3.  நோர்வே 0.876
  4.  சுவிட்சர்லாந்து 0.871
  5.  பின்லாந்து 0.868
  6.  சுவீடன் 0.864
  7.  செருமனி 0.861
  8.  ஆத்திரேலியா 0.861
  9.  டென்மார்க் 0.860
  10.  நெதர்லாந்து 0.857
  11.  அயர்லாந்து 0.854
  12.  கனடா 0.852
  13.  நியூசிலாந்து 0.846
  14.  சுலோவீனியா 0.846
  15.  செக் குடியரசு 0.840
  16.  பெல்ஜியம் 0.836
  17.  ஐக்கிய இராச்சியம் 0.835
  18.  ஆஸ்திரியா 0.835
  19.  சிங்கப்பூர் 0.816
  20.  லக்சம்பர்க் 0.811
  21.  ஆங்காங் 0.809
  22.  பிரான்சு 0.808
  23.  மால்ட்டா 0.805
  24.  சிலவாக்கியா 0.797
  25.  ஐக்கிய அமெரிக்கா 0.797
  26.  எசுத்தோனியா 0.794
  27.  இசுரேல் 0.787
  28.  போலந்து 0.787
  29.  தென் கொரியா 0.773
  30.  அங்கேரி 0.773
  31.  இத்தாலி 0.771
  32.  சைப்பிரசு 0.769
  33.  லாத்வியா 0.759
  34.  லித்துவேனியா 0.757
  35.  குரோவாசியா 0.756
  36.  பெலருஸ் 0.755
  37.  எசுப்பானியா 0.754
  38.  கிரேக்க நாடு 0.753
  39.  மொண்டெனேகுரோ 0.741
  40.  உருசியா 0.738
  41.  கசக்கஸ்தான் 0.737
  42.  போர்த்துகல் 0.732
  43.  உருமேனியா 0.717
  44.  பல்கேரியா 0.710
  45.  சிலி 0.710
  46.  அர்கெந்தீனா 0.707
  47.  ஈரான் 0.707
  48.  அல்பேனியா 0.706
  49.  உக்ரைன் 0.701
  50.  உருகுவை 0.689
  51.  மொரிசியசு 0.683
  52.  சியார்சியா 0.682
  53.  அசர்பைஜான் 0.681
  54.  ஆர்மீனியா 0.680
  55.  பார்படோசு 0.669

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads