அனோ டொமினி

From Wikipedia, the free encyclopedia

அனோ டொமினி
Remove ads

அனொ டொமினி (இலத்தீன்: சுருக்கம்: Anno Domini ; முழு: anno Domini nostri Jesu Christi) [1][2] என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும்[3], 'நமது கடவுளின் ஆண்டு' [4][5] என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.

Thumb
டயொனிசியஸ் எக்சிகுஸ் அனோ டொமினி ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.

இதன் தமிழாக்கம் கிறிஸ்துவுக்குப் பின் என்பதனால், கி.பி. எனச் சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525-ஆம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் கிறிஸ்துவுக்கு முன் என்பதைச் சுருக்கிக் கி.மு. எனத் தமிழில் வழங்கப்படுகிறது.

அனொ டொமினி முறை கி.பி. 525-இல் பகுக்கப்பட்டாலும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.[6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads