கிம்ப்
திறந்தமூல நிழலுரு(புகைப்படம்) திருத்தியாகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிம்ப் அல்லது குனு பட கையாள நிழல் (GIMP.. அல்லது GNU Image Manipulation Program) என்பது 'அடோபி போட்டோசாப்' மென்பொருளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும். ஆனால் இது அடோபி போட்டோசாப்பின் நகல் இல்லை. இது பல்வேறு இயக்கத்தளங்களில் அதாவது லினக்சு, விண்டோசு மற்றும் மாக் போன்றவற்றில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்தலாம்.
Remove ads
வரலாறு
ஒவ்வொரு மென்பொருள் தயாரிப்புக்கும் ஒரு வரலாறு இருக்கும் அதுபோல கிம்ப் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஸ்பென்சர் கிம்பால் மற்றும் பீட்டர் மேட்டிஸ் என்ற இரண்டு நண்பர்களும் ஒரு வரைகலை மென்பொருளுக்கான நிரலை எழுத தீர்மானித்தார்கள். அதில் ஒருவருக்கு வரைகலையில் அனுபவம் இருந்தது. எனவே அவர்களின் இந்த வரைகலை உருவாக்கம் திட்டம் நன்றாக வந்தது. அவர்களை பேராசியர் ஃபார்சித் என்பவர் ஊக்குவித்து, அந்த மென்பொருளில் வரவேண்டிய பிற புதிய வசதிகளை பற்றியும் அவர்களுக்கு விளக்கினார். அது வளர வளர அதற்கு General Image Manipulation Program அல்லது சுருக்கமாக GIMP என அழைத்தனர். இவ்வாறு உருவான கிம்ப் ஜனவரி 1996 இல் முதல் முறையாக பொது வெளியீடாக GIMP பதிப்பு 0.54 வெளியிடப்பட்டது.
கிம்பில் பிளக்கின் எனப்படும் கூடுதல் இணைப்பு முறைமை பின்பற்றுவதால் மென்பொருள் உருவாக்குபவர்கள் தனித்தனி நிரல்களாக இணைத்து கொள்ளலாம். இது வரையும் பொருட்கள் மற்றும் சேனல் செயல்பாடுகள் போன்ற அடிப்படை செயல்முறையை கொண்டுள்ளது. இவ்வாறு உருவான கிம்ப்பில் சில சிக்கல் இருந்தது, பல ப்ளக்கின் இருப்பதால் அவை ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தது. எனவே அடிக்கடி க்ராஷ் ஆகியது. எனினும் அதன் பயணம் இனிதாகவே இருந்தது. இதனை உருவாக்கிய அந்த பல்கலை நண்பர்கள் அதன் வெளியிட்டதும் பொது உருவாக்குபவர்களுக்காக ஒரு மின்னஞ்சல் குழுவை உருவாக்கினர். அதாவது அந்த மின்னஞ்சல் குழு உருவாக்க முக்கிய காரணம் அதில் பலர் தங்கள் மறுமொழியை தெரிவிப்பார்கள், அது சம்பந்தமான சந்தேகங்களை கேட்பார்கள், அதனை மேம்படுத்துவதற்கான வழியை சொல்லுவார்கள் என்பதே அதன் நோக்கமாகும்.
ஆனால் அந்த மின்னஞ்சல் குழுவால் பல சிக்கல் ஏற்பட்டது. அதன் பயனர்கள் மற்றும் உருவாக்குபவர்களுக்கிடையே சில சம்பந்தமில்லாத வினாக்கள் எழுந்தன. எனவே 1996 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கிம்ப் மின்னஞ்சல் குழு கிம்ப் பயனர் குழு என்றும் கிம்ப் டெவலப்பர் குழு எனவும் பிரிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கிம்ப் இணைய தளம் உருவாக்கப்பட்டது. கிம்ப் பயனரில் ஒருவர் கிம்பிற்கான கையேட்டை உருவாக்கினார். இவ்வாறு ஒவ்வொரு பதிப்பிலும் மெருகேறி கிம்ப் இன்று 2.4 என்ற பதிப்புக்கு முன்னேறியுள்ளது.
Remove ads
கிம்பின் வசதிகள்
கிம்ப் மென்பொருளை எடுத்து கொண்டால் அதில் பல வசதிகள் மற்றும் கருவிகள் உள்ளன. கிம்ப்பில் உள்ள கருவிகள் கருவிப்பட்டைகள், மெனு மற்றும் உரையாடல் பெட்டிகள் மூலம் கையாளப்படுகிறது. அதில் ஃபில்டர்கள், ப்ரஷ்கள், தேர்ந்தெடுத்தல், லேயர், மாஸ்கிங் கருவி, வெட்டும் கருவி என பல கருவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பார்த்தால் கிம்ப்பில் 48 ப்ரஷ்கள் உள்ளன. அதே போல நமக்கு வேண்டிய அளவில் நாமே ப்ரஷை உருவாக்கியும் கொள்ளலாம். அந்த ப்ரஷே கடின ஓரமாகவும், மென்மையான ஓரமாகவும், அழிக்கக்கூடியதாகவும், வெவ்வேறு ஒளி அளவிலும் என பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம்.
Remove ads
நிறங்கள்
RGB, HSV, கலர் வீல், CMYK மற்றும் கலவை முறை என பல நிற முறைமைகளை கொண்டுள்ளது. கிம்பில் CMYK கலவைக்கான RGB குறிப்பீடுகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இதற்கு மூன்றாம் நபர் கூடுதல் இணைப்புகளையே சார்ந்திருக்க வேண்டியதிருக்கும். மேலும் கிம்ப் க்ரேடியன்டுக்கு துணைபுரிகிறது, இதில் பல வகையான க்ரேடியன்ட் கலவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் பயனரும் தனக்கு தேவையான க்ரேடியன்ட்டை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுத்தல் மற்றும் மாஸ்கிங் கருவிகள்
கிம்ப்பில் நீள்சதுர மற்றும் நீளவட்ட தேர்ந்தெடுத்தல், ஃபீரி ஹாண்ட் தேர்ந்தெடுத்தல் நிறத்தால் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை செய்யலாம். மேஜிக் வாண்ட் எனப்படும் தேர்ந்தெடுத்தல் கருவி தொடர்ச்சியான பகுதிகளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. இண்டலிஜெண்ட் சிஸ்சர் (iScissors) கருவி கடினமான நிற மாற்றங்களை குறிப்பதற்கான பகுதிகளுக்கிடையே தானாக பாதைகளை உருவாக்க பயன்படுகிறது.
கிம்ப் பொதுவாக லேயர்களுக்கு துணைபுரிகிறது. இதில் ஒளிஊடுருவும் லேயரும் அடங்கும். அதாவது இதனை திரையில் காட்டலாம், மறைக்கலாம் அல்லது பகுதி ஒளிஊடுருவுவதாக மாற்றலாம். சேனல்கள் படங்களுக்கு பல்வேறு வகையான நிற ஜாலங்களை கொடுக்கிறது.
Remove ads
எஃபெக்ட்ஸ், ஸ்கிரிப்ட்ஸ் மற்றும் ஃபில்டர்கள்
கிம்ப்பில் 150 க்கும் மேற்பட்ட எஃபெக்ட்டுகள் மற்றும் ஃபில்டர்கள் இருக்கின்றன. அவற்றில் Drop Shadow, Blur, Motion blur மற்றும் Noise போன்றவையும் அடங்கும். இவற்றில் ஸ்கிரிப்ட் என்று எடுத்து கொண்டால், அவை தானாக கிம்ப் பணிகளை செய்ய எழுதப்படும் ஒரு கட்டளை மொழியாகும். Script-Fu என்பது கிம்ப் தன்னகத்தே கொண்ட ஸ்கிரிப்ட் ஆகும். மேலும் Perl, Python அல்லது TCLம் வெளியிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
துணைபுரியும் கோப்பு வகை
கிம்ப் பல்வேறு வகையான கோப்பு வகைகளுக்கும் துணைபுரிகிறது. அதன் சொந்தமான கோப்பு வகை என எடுத்து கொண்டால் XCF என பெயரிடப்பட்டுள்ளது. இது பிரபலமான பட வகை கோப்புகளான BMP, JPEG, PNG, GIF and TIFF போன்றவற்றை வாசிக்கவும் எழுதவும் செய்கிறது. இது தவிர Autodesk flic அனிமேஷன், Corel Paint Shop Pro படங்கள், மற்றும் Adobe Photoshop ஆவணங்கள் உள்ள கோப்பு வகைகளுக்கும் துணைபுரிகிறது. வேறு துணைபுரியும் வகை என எடுத்து கொண்டால் Postscript வகை ஆவணங்கள், X பிட்மேப் படங்கள், Zsoft PCX போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம். இவை தவிர, SVG கோப்புகளின் பாதை விவரங்கள் வாசிக்கவும் எழுதவும் செய்கிறது மற்றும் ICO விண்டோஸ் ஐகான் கோப்புகளையும் ஏற்றுக்கொள்கிறது.
கிம்ப்பானது PDF கோப்புகளையும் மற்றும் பல டிஜிட்டல் கேமிராக்களின் கேமிரா ரா கோப்புகளையும் இறக்குகிறது. ஆனால் அவற்றை சேமித்து கொள்வதில்லை.
Remove ads
விநியோகம்
கிம்ப்பின் விநியோகம் GPL உரிமத்தின் கீழ் சுதந்திர மென்பொருளாக அது விநியோகிக்கப்படுகிறது. இதன் இணைய தளம் கம்பைல் செய்யப்பட்ட கிம்பை கொடுக்கவில்லை, அதன் மூலக்குறியீடு மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் இது பல்வேறு இயக்கத்தளங்கள் (விண்டோஸ், மேக், லினக்ஸ் விநியோகங்கள்) மற்றும் கணினி கட்டமைப்பு போன்றவற்றை சார்ந்தும் தனித்தனியாக கம்பைல் செய்யப்படுகிறது.
கிம்ப் பதிப்புகள்
கிம்ப்பின் பதிப்பு 0.54 என்ற பதிப்புடன் தொடங்கியது. இது 1996 ஜனவரியில் வெளியிடப்பட்டது. Linux 1.2.13, Solaris 2.4, HP-UX 9.05, மற்றும் SGI IRIX இயக்கத்தளங்களில் மட்டுமே இயங்கியது. இதில் 8, 15, 16 மற்றும் 24 பிட் நிறங்களே துணைபுரிந்தது. மேலும் rgb color, grayscale அல்லது indexed நிறங்களாக படங்கள் பார்க்கப்பட்டன. GIF, JPEG, PNG, TIFF மற்றும் XPM ஆகிய கோப்பு முறைமைகள் துணைபுரிந்தன. ஆரம்பத்தில் இது லினக்ஸ் பயனர்களுக்கு ஒரு பயனுள்ள மென்பொருளாக தோன்றியது. இதற்கு உதவி கையேடுகள் எழுதியவர்களே இதனை பயன்படுத்தினர்.
அதன் பின் 1997 ஜூன் மாதம் கிம்ப் 0.60 பதிப்பு GNU பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதில் ஏர் பிரஷ், சேனல் செயல்பாடுகள், கலர் பேலட் என்று பல கருவிகளில் மேம்பாடு செய்யப்பட்டது. சில புதிய கருவிகளும் சேர்க்கப்பட்டன.
கிம்ப் 0.99 வெளியிடப்பட்ட போது கிம்ப் டூல்கிட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதாவது GTK என்பது GTK+ என்று மறுபெயரிடப்பட்டது.
கிம்ப் 1.0 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டின் போது கிம்ப் மற்றும் GTK+ ஆகிய இரண்டும் இரு திட்டங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி திட்டங்களாக செயல்பட துவங்கின. இந்தப் பதிப்பில் xcf என்று தனக்கென தனியான கோப்பு முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த xcf கோப்பு முறை லேயர், கைடுகள் மற்றும் தேர்வு செய்தல் போன்றவைக்கு துணைபுரிந்தது. மேலும் கிம்ப் திட்டத்திற்கென ஒரு இணைய தளம் தனியாக துவக்கப்பட்டது. இதனை இன்று classic.gimp.org என்பதில் காணலாம். இதில் ஆரம்ப கையேடுகள் மற்றும் கூடுதல் மூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
கிம்ப் 1.2 2000 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் சர்வதேசமயமாக்கல் விருப்பங்கள், மேம்பட்ட நிறுவல் உரையாடல்கள், பல பிழைத்திருத்தங்கள், சில கூடுதல் இணைப்புகள் மற்றும் நினைவக சிக்கல்களுக்கான தீர்வு என பல புதிய முன்னேற்றங்களை கொண்டிருந்தது.
கிம்ப் 2.0 2004 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் GTK+ 2 டூல்கிட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இப்போது 2008இல் 2.46 வெளியிடப்பட இருக்கிறது.
Remove ads
அடோப் போட்டோஷாப்புடன் ஒரு ஒப்பீடு
இன்று அடோப் என்றாலே எல்லோருக்கும் தெரியும். அது ஒரு மிக வலிமையான வரைகலை மென்பொருட்களின் பிராண்ட். இதிலிருக்கும் போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்ற சில சமயங்களில் கிம்ப் இருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் இவற்றுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பார்த்தால், போட்டோஷாப் கிம்ப்பிலுள்ள சில ப்ளக்கின் அல்லது ஸ்கிரிப்ட்களுக்கு ஏற்றதாக இல்லை. அதே போல கிம்ப்பும் பலவற்றுக்கு துணைபுரிவதில்லை அல்லது குறைந்த அளவே துணைபுரிவதாக இருக்கிறது.
கிம்ப்பின் சொந்த கோப்பு முறைமையான XCF போட்டோஷாப்பினால் துணைபுரிவதில்லை. ஆனால் போட்டோஷாப்பின் சொந்த கோப்பு முறைமையான PSD மற்றும் பிற கோப்பு முறைமைகளும் கிம்பால் துணைபுரிகிறது. மேலும் கருவிகள் என எடுத்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையே பல கருவிகள் ஒரே மாதிரியான வேலையை செய்கிறது. சிலவற்றுக்கு பெயர் மட்டும் வேறுபடுகிறது.
கிம்ப்பும் போட்டோஷாப்பும் அவற்றின் நிற மேலாண்மை வசதிகளில் வேறுபடுகின்றன. போட்டோஷாம் 16, 32 பிட் மற்றும் Pantone நிற முறைமை அல்லது ஸ்பாட் நிறங்கள் மற்றும் CMYK, CIE XYZ போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. ஆனால் கிம்ப் Pantoneக்கு சில சட்டரீதியான பிரச்சனைகளால் துணைபுரிவதில்லை மற்றும் இது அடிப்படை CMYKக்கு துணைபுரிகிறது.
மேலும், போட்டோஷாப்பால் துணைபுரியும் பல கருவிகள் மற்றும் வசதிகளுக்கு கிம்ப் துணைபுரிவதில்லை. லேயர்களை ஒழுங்குப்படுத்தல் (இங்கு லேயர்கள் ஃபில்டர்கள் போல செயல்படுகிறது), லேயர் பாணிகள், டெக்ஸ் பிளிண்டிங் (நிழலிடுதல் மற்றும் ஒளிர்தல்), ஹிஸ்டர் ப்ரஷ் கருவி, லேயர் சாளரத்தில் கோப்புறைகள் என பல வசதிகள் கிம்ப்பில் இல்லை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
