கியாசுத்தீன் பல்பான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கியாசுத்தீன் பல்பான் (Ghiyas ud din Balban, 1200 – 1287) அடிமை வம்சம் எனப்பட்ட மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தானகத்தின் துருக்க ஆட்சியாளரும் ஆவார்.[1][2][3][4][5][6][7] இவர் 1266 ஆம் ஆண்டு முதல் 1287 ஆம் ஆண்டு இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார்.
வரலாறு

கியாசுத்தீன் பல்பான் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு அடிமையாக காசுனி என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த சம்சுத்தீன் இல்த்துத்மிசு 1232 ஆம் ஆண்டு வாங்கினார்.[8] எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய குதுப்புத்தீன் ஐபாக்கின் உத்தரவுக்கு அமைய பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.
இவர் சுதந்திரமாகக் கல்வி கற்றார். பின்னர் நாட்டின் 40 துருக்கப் பிரபுக்களைக் கொண்ட குழுவொன்றுக்குத் தலைவர் ஆனார். சுல்தானகத்தில் ரசியா சுல்தானாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டபின் ஏற்பட்ட ஆட்சிக் காலங்களின்போது, பதவி நிலைகளில் இவர் வேகமாக முன்னேறினார். 1246 முதல் 1266 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இவர் பிரதம அமைச்சராகப் பணியாற்றினார். 1266 ஆன் ஆண்டில் நசிருத்தீன் மகுமூத் இறந்ததும், தானே தன்னை ஆட்சியாளனாக அறிவித்துக் கொண்டார். இவர் இறந்த சுல்தானின் மனைவியின் தந்தையாவார்.
பல்பான் சுல்தானகத்தை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.[9]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads