கிரயேம் ஹிக்
இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரயேம் ஹிக் (Graeme Hick, பிறப்பு: மே 23 1966), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 65 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 120 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 526 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 651 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991 - 2001 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 40,000 க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்.[1] பெரும்பாலும் மூன்றாவது வீரராக களத்தில் இறங்கினார். மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் 20,000 ஓட்டங்களுக்கும் அதிகமாக ஓட்டங்களை எடுத்த மூன்று வீரர்களில் இவர் ஒருவராகத் திகழ்கிறார். கிரகாம் கூச் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்தச் சாதனைகளைப் புரிந்துள்ள மற்ற இரண்டு வீரர்கள் ஆவர். மேலும் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 முறை 100 ஓட்டங்களை எடுத்த 25 வீரர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். [2] மூன்று வெவ்வேறு தசாப்தங்களில் (1988, 1997 மற்றும் 2002) முதல் தர மூந்நூறுகளை அடித்த ஒரே துடுப்பாட்ட வீரர் இவர் ஆவார். [3] கிரஹாம் கூச்சிற்குப் பிறகு எல்லா நேரத்திலும் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார். [பொ 1]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
ரோடீசியாவின் சாலிஸ்பரியில் (இப்போது ஹராரே, சிம்பாப்வே ) புகையிலை விவசாய குடும்பத்தில் பிறந்த ஹிக், முதலில் துடுப்பட்டத்தினை விட வளைதடிப் பந்தாட்டத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.உண்மையில் தேசிய பள்ளி வளைதடிப் பந்தாட்ட அணிக்காக விளையாடினார். அவர் ஒரு மட்டையாளர் என்பதனை விட ஒரு சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் 1979 ஆம் ஆண்டில் அவர் தொடர்ந்து அதிக ஓட்டங்களை எடுக்கத் தொடங்கினார். பள்ளித் துடுப்பாட்ட அணி சார்பாக அதிக மட்டையாளர் சராசரியினை வைத்திருந்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அப்போது இவரின் இவரின் சராசரி 185 ஆக இருந்தது.அவர் 1980 இல் லேசான மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்டார், ஆனால் அவர் தேசிய இளையோர் பள்ளி அணியின் தலைவராகத் தேர்வானார்.நீண்ட காலத்திற்கு முன்பே பள்ளியின் மூத்தவர் அணிக்காக விளையாடினார். [4] அவர் பிரின்ஸ் எட்வர்ட் பள்ளியில் பயின்றார் . [5]
தனது 16 ஆம் வயதில், ஹிக் 1982–83ல் இளையோர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக சிம்பாப்வே கோல்ட்ஸ் மற்றும் சிம்பாப்வே மாவட்டத் துடுப்பாட்ட அணிக்காக மூன்று வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். முத்தாரேவில் நடந்த இரண்டாவது போட்டியில் டீன் ஜோன்ஸை ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால் மட்டையாட்டத்தில் அவர் 0, 2 மற்றும் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 1983 உலகக் கோப்பைக்கான சிம்பாப்வே அணியில் ஹிக் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் உலகக் கோப்பைத் தொடரில் சேர்க்கப்பட்ட மிக இளம் வயது சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் என்ம் சாதனை படைத்தார்.[6] ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அக்டோபர் 7, 1983 அன்று, ஹராரேவில் இளம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சிம்பாப்வேக்காக ஹிக் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் மூன்ரு இழப்புகளையும் கைப்பற்றினார்.மேலும் அதே துடுப்பாட்ட அணிக்கு எதிராக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியிலும் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களை எடுத்தார்.
டிசம்பர் 7, 1983 அன்று, இலங்கை லெவன் அணிக்கு எதிராக சிம்பாப்வே அணிக்காக விளையாடும்போது, இலங்கை டெஸ்ட் பேட்ஸ்மேன் சுசில் பெர்னாண்டோவை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார்.பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற போட்டியில் இவர் தனது முதல் 50 ஓட்டங்களை எடுத்தார்.
Remove ads
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads