கிரிக்

From Wikipedia, the free encyclopedia

கிரிக்map
Remove ads

கிரிக் (Gerik) மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். உலு பேராக் மாவட்டத்தில் இருக்கிறது. [1] துணை மாவட்டத்தின் பெயரும் கிரிக். இந்த நகரத்தை கெரிக் என்றும் அழைப்பார்கள். மலேசிய வாழ் தமிழர்கள் கிரிக் என்று அழைக்கிறார்கள்.

விரைவான உண்மைகள் கிரிக்Gerik, நாடு ...

கிரிக் நகரம், ஈப்போ மாநகரத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், பட்டர்வொர்த் மாநகரில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மலேசியாவை கிழக்கு மேற்காக இணைக்கும் கிழக்கு-மேற்கு விரைவுசாலையின் நடு மையத்தில் அமைந்து இருப்பதால், இந்த நகரை ஓய்வு நகரம் (Rest Town) என்றும் அழைக்கிறார்கள். மலேசிய தாய்லாந்து எல்லையில் இருந்து, மிக அருகில், 30 கி.மீ. தொலைவில் தான் இருக்கிறது.[2]

Remove ads

வரலாறு

நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1880களில் கிரிக் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. 1870 இல், தாய்லாந்தில் இருக்கும் பட்டாணி எனும் இடத்தில் இருந்து சிலர் இங்கு வந்து குடியேறினார்கள். அந்தப் பகுதியின் காடுகளை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்டனர். புதிதாக வந்து குடியேறியவர்களுக்கு தோக் ஆட் (Tok Ad) என்பவர் தலைவராக இருந்தார். அப்போது ரேமான் எனும் ஒரு சிற்றரசர் அந்தப் பகுதியில் வேட்டையாட வந்தார்.[3]

அப்போது, அங்குள்ள ஒரு மூங்கில் காட்டில் வித்தியாசமான சத்தத்தைக் கேட்டார். கெரிட் கெரிட் எனும் சத்தம். ஆராய்ந்து பார்த்ததில் காட்டெலிகள் மூங்கில் வேர்களைச் சாப்பிடுவதைக் காண முடிந்தது. அதன் பின்னர், அவர் அந்த இடத்திற்கு கெரிட் என்று பெயர் வைத்தார். காலப் போக்கில், கெரிட் என்பது கிரிக் என்று பெயர் மாற்றம் கண்டது.[4]

Remove ads

நிலவியல்

கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. கிழக்கு-மேற்கு விரைவுசாலை அமைக்கப் பட்ட பின்னர், இந்த நகரம் வேகமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது.

மக்கள் பிரதிநிதிகள்

மலேசிய நாடாளுமன்றம்

பேராக் மாநிலச் சட்டமன்றம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads