கிரிஜா வியாஸ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

கிரிஜா வியாஸ்
Remove ads

கிரிஜா வியாசு (Girija Vyas) ஓர் இந்திய அரசியல்வாதியும், கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 15வது மக்களவைக்கு, இராசத்தானின் சித்தோர்கார் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும் செயல்பட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் கிரிஜா வியாஸ் Girija Vyas, வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சர் ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

கிரிஜா வியாசு 1946 சூலை 8ஆம் தேதி கிருஷ்ணா சர்மா மற்றும் ஜமுனா தேவி வியாசு ஆகிய இணையருக்கு மகளாகப் பிறந்தார். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, உதய்பூர் மோகன்லால் சுகதியா பல்கலைக்கழகம், டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார், இவற்றில் மூன்று புத்தகங்கள் கவிதைப் புத்தகங்களாகும். எக்சாசு கி பர் என்பது உருது கவிதைப் புத்தகமாகும். சீப், சமுந்தர் மோதி என்னும் கவிதைப் புத்தகத்தில் இந்தி, உருது மொழிக் கவிதைகள் உள்ளன. (நினைவுகள்) நாஸ்டால்ஜியா ஆங்கில வசனங்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது.

Remove ads

அரசியல் வாழ்க்கை

1985ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக உதயப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1990 வரை இராசத்தான் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார்.[1]

1991ஆம் ஆண்டில், இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு இராசத்தானின் உதய்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் அரசாங்கத்தின் துணை அமைச்சராக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு நியமிக்கப்பட்டார்.

  • 1993 முதல்: தலைவர், அகில இந்திய மகளிர் காங்கிரசு.
  • 1993-96: உறுப்பினர், ஆலோசனைக் குழு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்; உறுப்பினர், வீடு மற்றும் வெளி விவகாரங்களுக்கான நிலைக்குழு
  • 1996: 11ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2ஆவது முறை)
  • 1996 முதல்: உறுப்பினர், தேசிய மொழிக்கான குழு; உறுப்பினர், பெண்கள் மேலாதிக்க குழு; உறுப்பினர், பெட்ரோலியம் நிலைக்குழு; உறுப்பினர், ஆலோசனைக் குழு, உள்துறை அமைச்சகம்
  • 1999: 13ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3ஆவது முறை)
  • 1999-2000: உறுப்பினர், பெட்ரோலியம் மற்றும் இரசாயனங்கள் குழு

2001-2004 வரை, இவர் இராசத்தான் மாகாண காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் இருந்தார். தற்போது, அவர் ஊடகத் துறை, அகில இந்திய காங்கிரசு குழுத் தலைவர் மற்றும் இந்தோ-ஐரோப்பிய ஒன்றிய சமூக உறுப்பினராக உள்ளார்.

பிப்ரவரி 2005இல், காங்கிரசு கட்சியின் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் முக்கியமானவராக இருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் ஐந்தாவது தலைவராகச் செயல்பட்டார் (01.08.2011 வரை).

2008ஆம் ஆண்டில் இராசத்தானில் சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 2013இல் இராசத்தான் அமைச்சரவையில் வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சராக இருந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads