கிரிவலம் (திரைப்படம்)
2005 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரிவலம் (Girivalam) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திகில், நாடகத் திரைப்படம் ஆகும். சிவ்ராஜ் இயக்கிய இப்படத்தில் சாம், ரிச்சர்ட், ரோஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
Remove ads
கதை
அர்ஜுன் ( ஷாம் ) ஒரு நடனக் குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ளான். குழுவில் உள்ள நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரியா ( ரோஷினி ) அவரை காதலிக்கிறாள். இந்த நடனப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிபெற விரும்புகிறது குழு அவர்களின் நோக்கம் என்ன ஆனது என்பதே கதை.
நடிகர்கள்
- சாம் அர்ஜுன்
- ரிச்சர்ட் கிரிபிரசாத்
- ரோசினி பிரியாவாக
- அனாமிகா சுவேதாவாக
- சார்லி பாவாடையாக
- ரமேஷ் கண்ணா கௌரிசங்கராக
- ஒபெத் மைக்கேல்
- கிருஷ்ணா
- இன்னாயத்
- யுவன் சங்கர்
- டெலிபோன் சுப்பிரமணி
- இராஜேஷ்
- ஜப்பான் குமார்
தயாரிப்பு
இந்த படத்தை சிவ்ராஜ் இயக்கியுள்ளார், அவர் இதற்கு முன்பு அடிதடி (2004) என்ற படத்தையும் இரண்டாவதாக காதல் கிறுக்கன் (2003) படத்தையும் இயக்கினார்.[2] இது ஹம்ராஸ் (2002) என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தில் சாம் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இயற்கை (2003) படத்தில் அவர் நடிப்பதற்கு முன் இந்த படத்தில் சாம் நடித்தார்.[3]
இசை
இப்படத்திற்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை பிறைசூடன், சினேகன், பா. விஜய் ஆகியோர் எழுதினர்.[4]
வெளியீடு
இப்படமானது குறைந்த செலவில் தயாரிக்கபட்ட படங்களான குருதேவா மற்றும் தகதிமிதா ஆகியவற்றுடன் வெளியான இப்படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை.[5]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads