கிருஷ்ணன் சசிகிரண்
இந்திய சதுரங்க வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணன் சசிகிரண் (பிறப்பு 7 ஜனவரி 1981) ஒரு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவர்.

அவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2013 இல் விஸ்வநாதன் ஆனந்தின் பயிற்சி உதவியாளர்களில் (seconds) ஒருவர்.[1]
Remove ads
சதுரங்க வாழ்க்கை
மெட்ராஸில் பிறந்த சசிகிரான் 1999 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். மேலும் 2002, 2003 மற்றும் 2013 இல் மீண்டும் வென்றார். 1999 இல் வியட்நாமின் வாங் டோவில் நடந்த ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பையும் வென்றார்.[2] 2000 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கான நியமங்களை சசிகிரண்நிறைவு செய்தார். 2001 ஆம் ஆண்டில், அவர் மதிப்புமிக்க ஹேஸ்டிங்ஸ் சர்வதே சசதுரங்க போட்டியில் வென்றார். 2003 ஆம் ஆண்டில், அவர் 4 வது ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் மற்றும் கோப்பன்ஹேகனில் பொலிடிகன் கோப்பையை வென்றார். மலமோ மற்றும் கோபன்ஹேகனில் நடைபெற்ற 2005சிகேமன் & கோ சதுரங்க போட்டியில் ஜான் டிம்மான் உடன் இணைந்து Sasikiran முதல் இடத்தை பிடித்தார்.[3]
2014 ஆம் ஆண்டு ட்ரோம்ஸில் நடந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 7.5/10 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல உதவினார் .[4] சசிகிரன் மூன்றாம் குழுவில் தனிப்பட்ட வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.[5]
Remove ads
கடித செஸ்
கிருஷ்ணன் சசிகிரனும் ஒரு வெற்றிகரமான கடித சதுரங்க வீரர். 2015 ஆம் ஆண்டில் அவர் சர்வதேச மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார் மற்றும் 2016 இல் அவர் மூத்த சர்வதேச மாஸ்டர் ஆனார். மரியன் வின்செவ் நினைவு மற்றும் பால்சியாஸ்காஸ் அழைப்பிதழில் அவர் இரண்டு பட்டங்களுக்குமான நெறிமுறைகளை நிறைவேற்றினார் .[6]
தனிப்பட்ட வாழ்க்கை
சசிகரன் சென்னை நங்கநல்லூரின் மாடர்ன் மூத்த மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்.
அவருக்கு ராதிகா என்பவருடன் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads