நங்கநல்லூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நங்கைநல்லூர் (ஆங்கிலம்: Nanganallur) தமிழகத்தின் சென்னை புறநகர் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி. நங்கைநல்லூர், பழவந்தாங்கல், தலக்கனன்சேரி மற்றும் ஆதம்பாக்கம் கிராமங்கள் அனைத்தும் ஒருகிணைந்த குடியிருப்பு பகுதியே நங்கைநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கே உரித்தான பன்முகத் தன்மைகளான பல சமயங்கள், பல இனங்கள், பல மொழிகள் பேசுவோர் இவ்வூரிலும் வாழ்கின்றனர். மீனம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் ஆகிய இரண்டு தொடர்வண்டி நிலையங்களை கொண்டது. சமீப காலமாக கோயில்களால், குறிப்பாக இங்குள்ள 32 அடிக்கு மிக பிரம்மாண்டமாக உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலால் இவ்வூர் மிகவும் புகழடைந்து வருகிறது.


தட்சிண தீபாலாயம் என்பது இவ்வூரின் புராண பெயராகும். சோழர்காலத்தில் இவ்வூர் தன்மீச்சுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அருகருகே அமைந்துள்ள சோழர்காலத்திய தர்மலிங்கேசுவரர் (தன்மீச்வரர்) என்ற சிவன் கோவிலும், பல்லவர் காலத்திய லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயிலும் இவ்வூரின் பழமையை கூறுகின்றன.
இவை தவிர குறிப்பிட்டு சொல்லத்தக்க உத்திர குருவாயூரப்பன் கோயில், நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், இராஜராஜேசுவரி கோயில், இராகவேந்திர கோயில், சத்ய நாராயணன் கோயில், தேவி கருமாரியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், ஏழூரம்மன் கோயில், ஹயவதன பெருமாள் கோயில், அர்த்த நாரீசுவரர் கோயில், லட்சுமி நாராயணன் கோயில், லட்சுமி ஹயக்ரீவர் கோயில், ஸர்வ மங்கள நரசிம்மர் கோயில், சித்தி விநாயகர் கோயில் உட்பட பல கோயில்களால் நிறைந்து "கோயில் நகரம்" என்றழைக்கப்படுகிறது.
காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டு இப்போது நங்கநல்லூர் என மறுவியுள்ளது.
அடிப்படை வசதிகளை ஒரளவுக் கொண்ட இவ்வூர் மீனம்பாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், திருசூலம் மற்றும் மூவரசம்பேட்டை ஆகிய ஊர்களை எல்லையாகக் கொண்டு சென்னையோடு 2011-ஆம் வருடம் இணைக்கப்பட்டது.
Remove ads
பள்ளிகள்
இப்பகுதியில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9.5 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த நேரு அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடிய பெண்கள் மேனிலைப்பள்ளி, மைய அரசினால் நடத்தப்படும் டிஜிக்யூ மேனிலைப்பள்ளிகள் இரண்டு, நம்மாழ்வார் முன்மாதிரி மெட்ரிகுலேசன் பள்ளி, செல்லம்மாள் வித்யாலயா, பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் பள்ளி, ப்ரின்சு குழும பள்ளி ஆகியன குறிப்பிடத்தக்கன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads