கிறிஸ்துமசு தீவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி (Territory of Christmas Island) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன[1]. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
வரலாறு
1643 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் தலைவன் கப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் கிறிஸ்துமசு நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார்[2]. 1666 ஆம் ஆண்டில் இத்தீவின் வரைபடம் டச்சு நிலப்பட வரைஞர் பீட்டர் கூஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நிலவரைபடத்தில் வெளியிடப்பட்டது. கூஸ் இத்தீவுக்கு மோனி எனப் பெயரிட்டார். இப்பெயர்க்காரணம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை[3]. மார்ச் 1688 இல் பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த சிக்னெட் கப்பலைச் சேர்ந்த வில்லியம் டேம்பியர் என்பவர் இத்தீவைச் சுற்று வந்ததற்கான பதிவுகள் கிடைக்கப்பட்டன. எவரும் இத்தீவில் வசிப்பதாக அவர் காணவில்லை[4]. டேம்பியரின் கப்பலில் பணியாற்றிய இரு மாலுமிகள் இத்தீவில் முதன் முதலில் இறங்கிய மனிதர்களுக்கான பதிவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. டானியல் பீக்மன் என்பவர் பின்னர் சென்றதற்கான பதிவுகள் அவரது 1718 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போர்ணியோ தீவுக்கான அவரது பயண நூலில் உள்ளன.
Remove ads
தேங்காய் நண்டு
இந்த தீவில் அரியவை உயிரினங்கள் அதிகமாக காணப்படுகின்றது. இவற்றில் தேங்காய் நண்டு பிரசித்தி பெற்றதாகும். இந்த வகை நண்டுகள் 3 அடிகள் நீளத்துடன், 4 கிலோ எடைகள் கொண்டதாக உள்ளது. இது தன் ஒரு காலால் ஒரு தேங்காயை உடைக்கும் திறன் படைத்ததாக உள்ளது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads