கிறித்தோபர் நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறித்தோபர் நகர் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்வதிபுரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[2] இது அரபிக்கடலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 65 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி பார்வதிபுரத்தின் விவசாய நிலங்களாக இருந்த பகுதியாகும். பெருவிளையும் கோட்டவிளையும் இதற்கு அருகிலுள்ள கிராமங்களாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இது 1980இற்குப் பின்னர் வளர்ச்சியடைந்த ஒரு பகுதி ஆகும்.
இது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.
Remove ads
வழிபாட்டிடங்கள்
- சாஸ்தா கோயில்
- சிஎசுஐ கிறித்தோபர் காலனி தேவாலயம்
- புனித பாத்திமா மாதா தேவாலயம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads