பார்வதிபுரம் (கன்னியாகுமரி மாவட்டம்)

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பார்வதிபுரம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், ஆளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இது நாகர்கோவில் நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. நாகர்கோவில் மையத்திலிருந்து ஐந்து கி.மீ., மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது. இது நாகர்கோவிலின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுளம், ஆலம்பாறை, கிறிஸ்டோபர் நகர், ராஜலட்சுமி நகர், களியன்காடு ஆகியவை பார்வதிபுரத்தின் அருகில் உள்ள ஊர்கள் ஆகும். இவற்றில் பெருவிளை பார்வதிபுரத்தின் ஒரு பெரிய பகுதியாகும். திருவனந்தபுரம்வ் தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ள அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன. 31 ஏ பேருந்து பார்வதிபுரம் சுற்றுவட்டார பேருந்து நிலையம் கிறிஸ்டோபர் பேருந்து நிறுத்தம் அண்ணா பேருந்து நிலையத்துடன் பார்வதிபுரத்தை இணைக்கிறது. [1]இந்த சேவை ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் கிடைக்கும்.

விரைவான உண்மைகள் பார்வதிபுரம் പാര്വതിപുരം, நாடு ...
Remove ads

வரலாறு

திருவாங்கூர் ராணி, பார்வதிபாய் தம்புராட்டி என்பவரின் தென்னிந்தியப் பெயருக்குப் பெயரிடப்பட்டது. முதன்மையாக பிராமணர்களுக்கு விலைச்சலுக்குரிய நிலம் மிகுந்த ஒரு கிராமத்தை வழங்கினார். பிராமணர்கள் சுசீந்திரம் கோவிலில் இருந்து திரும்பி வந்த ராணி மற்றும் அவரது அரச குடும்பத்தை உபசரித்ததினால் இது கிடைக்கப்பெற்றது.[சான்று தேவை]

கல்வி நிறுவனங்கள்

ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி, பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி வின்ஸ் பொறியியல் கல்லூரி, சன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்லூரிகள் பார்வதிபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.மேலும், பார்வதிபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில்ஸ்ரீ கிருஷ்ணா பல்தொழில்நுட்பக் கல்லூரி, சன் பல்தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் மார்னிங் ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் அமைந்துள்ளன.

Remove ads

வழிபாட்டுத் தலங்கள்

பார்வதிபுரம் அருகே அருள்மிகு முத்தராமன் கோயில், கிராமம் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், சுவாமி அய்யப்பன் கோயில் ஆகியவை உள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads