கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம்
மேகாலயாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம் (Eastern West Khasi Hills) மேகாலயா மாநிலத்தின் 12-வது மாவட்டமாக இதனை 10 நவம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. [3]இதன் நிர்வாகாத் தலைமையிடம் மைரங் நகரம் ஆகும். மேற்கு காசி மலை மாவட்டத்தின் மைரங் மற்றும் மௌதாத்திரைசன் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.
இது மாநிலத் தலைநக்ரான சில்லாங் நகரத்திற்கு மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1356.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மக்கள் தொகை 1,31,451 ஆகும்.
Remove ads
புவியியல்
மத்திய மேகாலயா மாநிலத்தின் காசி மலைகளில் கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரி-போய் மாவட்டம், தென்கிழக்கில் கிழக்கு காசி மலை மாவட்டம், தெற்கில் தென்மேற்கு காசி மலை மாவட்டம், மேற்கில் மேற்கு காசி மலை மாவட்டம் அமைந்துள்ளது. மௌதாத்திரைசன் மலைத்தொடர் இம்மாவட்டத்தின் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது.[4]மைரங் மற்றும் நாங்ஸ்டோயின் நகரங்களுக்கு இடையே அமைந்த இம்மலையின் மிக உயர்ந்த மௌதாத்திரைசன் கொடுமுடி 1,924.5 மீட்டர்கள் (6,314 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் வடக்கே பிரம்மபுத்திரா ஆறும், தெற்கே மேக்னா ஆறும் பாய்கிறது. இம்மாவட்டத்திற்குள் கின்சி ஆறு கிரி ஆறுகள் பாய்கிறது.[4][5]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் மைரங் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மௌதாத்திரைசன் ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
இம்மாவட்டத்தில் நெல், உருளைக் கிழங்கு, சிறுதானியங்கள் அதிகம் பயிரிடபடுகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 106 இம்மாவட்டத்துடன் சில்லாங் நகரம் இணைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads