கீசக வதம்
ஆர். நடரா ஜ முதலியார் இயக்கத்தில் 1916-18இல் வெளியான ஊமைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீசக வதம் (Keechaka Vadham) தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படமாகும். 1918ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, ஆர். நடராஜ முதலியார் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படம் மகாபாரதத்தில் இடம்பெறும் ஒரு சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதுவே தென்னிந்தியாவின் முதல் ஊமைத் திரைப்படமும் ஆகும். 1917-ஆம் ஆண்டு ஐந்து வாரங்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன, பின்னர் 1918-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் ஓர் ஊமைத் திரைப்படமாக இருந்தாலும், இதில் நடித்தவர்கள் பெரும்பாலும் தமிழ் நடிகர்களே. எனவே, இத்திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படமாகக் கருதப்படுகிறது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், இத்திரைப்படத்தைச் சேர்ந்த எந்தவொரு அச்சுகளும் கிடைக்கப்பெறவில்லை. இத்திரைப்படம் ஒரு தொலைந்து போன திரைப்படமாகி விட்டது.

Remove ads
கதை
இத்திரைப்படம் மற்போர் காட்சியோடு ஆரம்பிக்கிறது. ஒரு வலிமை மிக்க மற்போர் வீரர் விராட நாட்டைச் சேர்ந்த அனைவரையும் வீழ்த்தி விடுகிறார், அந்நாட்டு மக்கள் அவரை வீழ்த்த ஆளில்லாமல் தலைக் குனிந்து நிற்கின்றனர். அப்பொழுது பீமன் வந்து அந்த வீரனை வீழ்த்துகிறான்.
ஒருநாள் பாஞ்சாலி மலர்மாலை தொடுப்பதற்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட அந்நாட்டின் அரசியார் சுதோசனாவின் அண்ணனான கீசகன் அவளைக் கவர முயல்கிறான். எனினும், பாஞ்சாலி அவனிடம் இருந்து விலகிச் சென்று விடுகிறாள். கீசகன் தன் தங்கையான அரசியாரிடம் தனக்கு பாஞ்சாலி வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.
வேறு வழியறியாத விராடநாட்டு அரசியார் பாஞ்சாலியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். பாஞ்சாலி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய பாஞ்சாலி, அந்நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் பீமனை ரகசியமாகச் சந்தித்து விவரத்தைக் கூறி கீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.
வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, பாஞ்சாலி கீசகனிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னைச் சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, பாஞ்சாலி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீசகனுடன் போரிட்டுக் கொன்று பாஞ்சாலியை மீட்கிறான்.
Remove ads
நடிகர்கள்
- ஜீவரத்னம்
- ஆர். நடராஜ முதலியார்
- ராஜா முதலியார்
தயாரிப்பு
மூப்பனார் என்பவர் மிகப்பெரிய செல்வந்தர் ஆவார். தஞ்சாவூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 35mm ஒளிப்படமியும் இங்கிலாந்தில் வாங்கிய அச்சுப்பொறியும் வைத்திருந்தார். ஆர். நடராஜ முதலியார் அவரிடம் இருந்து அப்பொருட்களை ₹2000 விலையில் வாங்கிக் கொண்டார். அதன்பின்னர், நடராஜா முதலியார் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.
குறிப்புகள்
- திரைப்பட வரலாற்றாளர் சு. தியடோர் பாஸ்கரன், பேராசிரியர் பிரேம் சவுத்ரி ஆகியோர் இத்திரைப்படம் 1916 இல் வெளிவந்ததாகவும், சுரேஷ் சாப்ரியா, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் 1917 இல் வெளிவந்ததாகவும் குறித்துள்ளனர்.[1] Film historians ராண்டார் கை, சு. முத்தையா and professor Knut A. Jacobsen asserted the film was released in 1918.[2]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads