கீசரைட்டு
நீரேற்றம் அடைந்த படிகவடிவமற்ற சிலிக்காவின் வடிவம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீசரைட்டு (Geyserite) என்பது அமுதக்கல் எனப்படும் நீரேற்றம் அடைந்த படிகவடிவமற்ற சிலிக்காவின் ஒரு வடிவமாகும். பெரும்பாலும் சூடான நீரூற்றுகள் மற்றும் வெப்பநீருற்றுகளைச் சுற்றி இக்கனிமம் மேலோடு அல்லது அடுக்குகளாகக் காணப்படுகிறது. பல வட்டமான பிரிவுகளால் ஆன வெளிப்புற வடிவத்தைக் கொண்டிருக்கும் கீசரைட்டு கனிமம் பியோரைட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சிலிக்கா பல சிறிய குழிகளை அடைத்துக் கொண்டிருக்கும் என்பதால் கீசரைட்டு நுண்துளைகள் கொண்டதாக இருக்கும்.[1] பொதுவாக கீசரைட்டை சிலிசியசு சிண்டர் என்ற பெயராலும் அழைப்பர். கால்சியம் கார்பனேட்டால் ஆன சுண்ணாம்பு சின்டருடன் ஒப்பிட்டு சிலிசியசு சிண்டரை குழப்பிக் கொள்ளக்கூடாது.


2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் மேற்கு ஆத்திரேலியாவின் பில்பரா கிரட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கீசரைட்டு கனிமம் 3.48 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலத்தில் அறியப்பட்ட ஆரம்பகால வாழ்க்கைக்கு இது சான்றுகளாகக் கிடைத்திருக்கலாம்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads