சிலிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிலிக்கா அல்லது சிலிக்கான் ஈரொக்சைட்டு (Silicon dioxide) என்பது SiO2 என்னும் மூலக்கூற்று வாய்ப்பாடுடைய சிலிக்கானின் ஒக்சைட்டு ஆகும். இதுவே குவார்ட்சின் பிரதான கூறாகும். எனினும் சிலிக்கா குவார்ட்சு மட்டுமல்லாமல் மேலும் பல பளிங்கு மற்றும் பளிங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ளது. கண்ணாடி, புரைமைக் களி உட்பட பல வடிவங்களில் இது எமக்குப் பயன்படுகின்றது. இயற்கையில் மண்ணின் பெரும்பகுதியை ஆக்கின்றது. மணல், களி என்ற இரு மண் வடிவங்களிலும் சிலிக்கான் ஈரொக்சைட்டு உள்ளது.
Remove ads
பயன்பாடுகள்
- சீமைக்காரை உற்பத்தியில் களி வடிவமாகப் பயன்படுகின்றது.
- கண்ணாடி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றது.
- சிலிக்கான் உற்பத்தியில் பிரதான மூலப்பொருளாக உள்ளது. கார்பன் மூலம் சிலிக்கா சிலிக்கானாகத் தாழ்த்தப்பட்டுக் கார்பனோரொக்சைட்டு வெளியாகின்றது:
- SiO2 + 2 C → Si + 2 CO
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads