கீரிசுட்டான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கீரிசுட்டான் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மிகவும் சிறிய கிராமம் கீரிசுட்டான் ஆகும்.[1]

ஆரம்பம்

இக்கிராமம் 1977 ம் ஆண்டு புதிதாக மடுவில் இடம்பெயர்ந்து குடியமர்ந்த மக்களின் வதிவிடத்தை கருத்தில் கொண்டு , அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை தேவராஜா அடிகளாரின் வழிகாட்டலில் காடுகள் வெட்டியழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆரம்ப காலங்களில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்க்கை நடாத்தினர்.குடியமர்ந்து 10 வருடங்களில் மிகவும் சிறப்பாக முன்னேறிய மக்கள் வேளாண்மை ,தோட்டங்கள்,கால்நடை வளர்ப்பு,சுயதொழில் என பல்வேறு பட்ட துறைகளிலும்

சற்று வாழ்க்கை தரத்தில் முன்னேறிய மக்களுக்கு 1990ம் ஆண்டில் ஏற்ப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் கெடுபிடிகள் மிகவும் வேதனை நிறைந்தாதாக இருந்தது. இக்காலங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் குறிபிட்டு சொல்ல வேண்டிய ஒரு கிராமம் ஆகும்.

கத்தோலிக்க குருமாரின் பங்களிப்பு

அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த்க கத்தோலிக்க குருமார்களின் ஆரம்ப கால குருமட கல்விவாழ்க்கையின் தொடக்கமும் அ.ம.திகள் சபையை சார்ந்த தேவராஜா அடிகாளரின் உருவாக்கல் கிராமமான இங்கு மேற்கொண்டு மிகவும் சிறப்பானதொரு தொடக்கத்தினை மேற்கொண்டு கல்வி ,விளையாட்டு,ஆன்மிகம் என ஒரு ஒழுக்கமிகுந்த சமுக்கத்தை உருவாக்கி தந்திருந்தனர்.

அதன் பிற்பாடக பாடசாலை கல்வியினையும் ஆங்கிலகல்வியையும் கற்பித்து மிகச்சிறந்த கல்விக்கும் சேவை புரிந்தனர்.

1990ம்  ஆண்டு யுத்தம்

1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவம்,இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட ஈழ உள்நாட்டு போரின் போது மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இது மிகவும் பதிக்கப்பட்டது.

1998ம் ஆண்டு உள்நாட்டு போர்

இலங்கை இராணுத்தின் கெடுபிடியான இந்த யுத்ததில் பல சேதங்களை உண்டு பண்ணியது குறிப்பிட தக்கது.

முற்றுமுழுதான கிறிஸ்தவ கிராமமான கீரிசுட்டான் கிராமத்தில் ஆரம்ப காலங்களில் கத்தோலிக்க குருமாரின்,அருட்சகோதரிகளின் அளப்பறிய சேவைகள் குறிப்பிடத்தக்கது.

முன்னர் கிறிஸ்தவ கிராமமாக இருந்த போதும் தற்போது 04 இந்து குடுப்பங்களுடன் மிகவும் மத பேதமின்றி இயல்புடன் பழகும் நல்லிணக்கம் கொண்ட கிராமம்.

அமைவிடம்

இலங்கையின் வடமாகணத்தினுடைய மன்னார் மாவட்டத்தின் தென் கிழக்காக மடு செபமாலை அன்னை ஆலயத்திற்கு வடக்காக  ஒருங்கே தட்சனாமருதமடு,பாலம்பிட்டி கிராமங்களை அடுத்தும்,

வவுனியாவில் இருந்து மேற்காக தாண்டிக்குளம்,இலுப்பைகுளம் ஒருங்கே முள்ளிக்குளத்தை அடுத்து காணப்படும்

கிராமம்

கிராமத்தினுடைய பாடசலை விபரமும் ஆரம்பமும்.

மன்/கீரிசுட்டான் அ.த.க பாடசாலை

1970ல் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசலை,சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மரநிழல்களிலும் கொட்டில்களிலும்,ஆலயத்திலும் மேற்கொண்ட ஆரம்ப கல்விகாலம் மிகவும் இனிமை மிகுந்த நாட்கள் என தற்போதும் கூறிக்கொள்வதை கேள்விப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் ஏற்கெனவே கூறியதற்கு அமைய அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள்,அருட்சகோதரிகள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் பிற்பாடாக அரசின் கீழாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட அரச பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.பின்னர் தரம் 11வரை காணப்பட்டது.பின்னர் 1998ம் ஆண்டு யுத்ததின் பின்னர்பல  குடும்பஙக்ள் இடம்பெயர்ந்து வேறு பல இடங்களுக்கும்,இந்தியாவிற்கும் சென்று குடியமர்ந்தனர்.பின்னர் கானப்பட்ட 50 குடுப்பங்களில்

பின்னர் தரம் 09வரை கற்பிக்கப்பட்டு

தற்போது வெறும் 45குடும்பங்களே காணப்படும் இங்கு தற்போது ஆரம்ப பாடசாலையாகவும் தரம் 1-5 வரையும் மாத்திரமே காணப்படுகிறது.

கிராம அமைப்புகள்.

1.பற்றிமா விவசாய அமைப்பு 2.கிராம அபிவிருத்தி சங்கம் 3.விண்மீன்கள் இளைஞர்கழகம். 4.விண்மீன் சிறுவர்கழகம் 5.மாதர் அமைப்பு 6. கத்தோலிக்க இளையோர்கழகம்.

  1. Madhu. "DS Office". Archived from the original on 2021-06-28. Retrieved 2021-06-28.
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads