கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்
இந்தியாவில் உள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் (Keelaperumpallam Naganatha Swamy Temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும்.[1]
இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும்.
இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார்.
Remove ads
அமைப்பு
நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மூலவராக நாகநாதர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் கேது சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
Remove ads
விழாக்கள்
- சிவராத்திரி
- ஐப்பசி அன்னாபிசேகம்
- பங்குனி வாசுகி உற்சவம்
- பிரதோசம்
தலசிறப்பு
இச்சிவத்தலம் கேதுவுக்கு உரியதாகும்.
இவற்றையும் கான்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads