குக்கே சுப்பிரமணிய கோவில்

கருநாடகம் மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia

குக்கே சுப்பிரமணிய கோவில்map
Remove ads

குக்கே சுப்பிரமணிய கோவில் (Kukke Subramanya Temple, கன்னடம்: ಕುಕ್ಕೆ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ದೇವಾಲಯ இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தில் தெற்கு கன்னட மாவட்டத்தின் மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில் உள்ள கடபா தாலுக்கின் (முன்பு சுல்லியா தாலுக்காவில்) குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் (பாம்புகளின்) குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர்.இங்கு பூஜைகளும் தினசரி சடங்குகளும் சிவல்லி மத்வ பிராமணர்களால் செய்யப்படுகின்றன.

விரைவான உண்மைகள் குக்கே சுப்பிரமணிய கோயில், ஆள்கூறுகள்: ...
Thumb
குக்கே சுப்பிரமனிய சுவாமி
Remove ads

அமைவிடம்

குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது. [1]

போக்குவரத்து வசதி

குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில், மங்களுரிலிருந்து 105 கி. மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி. மீ., தூரத்த்திலும் உள்ளது. புகைவண்டி, பேருந்து, சிற்றுந்து மற்றும் வாடகை வண்டிகள் மூலம் எளிதல் அடையலாம். மேலும் பெங்களூர்-மங்களூர் புகைவண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு புகைவண்டி நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் சுப்ரமண்யா எனும் கிராமத்தின் நடுவில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலை அடையலாம்.

Remove ads

கோயில்

Thumb
குக்கி ஸ்ரீசுப்பிரமண்ய சுவாமி கோயில், சுப்ரமண்யா, (கர்நாடகா)

பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும். மேலும் கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே உள்ள கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபட்டால் சர்ப்பங்கள் வெளிவிடும் விஷத்தை எதிர்கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. டிசம்பர் மாதத்தில் இக்கோயிலில் மூலவரை பூசை செய்யும் அர்ச்சகர்கள், வாழை இலைகளில் விருந்து உணவு உண்டபின், அந்த வாழை இலைகளை வரிசையாக பரப்பி அதன் மேல் அங்கப்பிரதட்சனம் செய்தால் நன்மை பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.[2] [3]

தல வரலாறு

புராணக்கதைப்படி, சுப்பிரமணியசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்று பின்பு, சுப்பிரமணியசுவாமி, தன் அண்ணன் கணபதி மற்றும் மற்றவர்களுடன், இக்குமாரமலையில் தங்கினார்கள். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்பிரமணியசுவாமியை மகிழ்ந்து வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற, சுப்பிரமணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம், குமாரமலையில் நடந்தது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி, தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

Remove ads

மூலவரின் சிறப்பு

முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிறப்பு பூசைகள்

டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள், குமாரதார ஆற்றில் புனித நீராடி முருகனை வழிபடுதல் சிறப்பாகும். குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூசை எனும் நாக தோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பான பூசையாகும். மேலும் அஸ்லேஷா நட்சத்திர (Ashlesha Nakshatra) நாளில் செய்யப்படும் நாகதோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் மகாசிவராத்திரி.

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads