குங்கிலியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குங்கிலியம் அல்லது சால் [1] (Shorea robusta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம் ஆகும். இது 30இல் இருந்து 35 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் 10 - 25 செ. மீ நீளமும் 5 - 15 செ. மீ அகலமும் கொண்டவை.
Remove ads
பயன்கள்
இது உறுதியாக இருப்பதால் வீட்டு மரச்சாமான்கள் செய்ய உதவுகின்றன. மரங்களின் பாலிலிருந்து எடுக்கும் பிசின் குங்கிலியம் ஆகும். இது ஒரு பிசின். தீயிட்டால் எரிந்து புகையாகும். புகை நறுமணம் உடையது. கிரேக்கம், ரோமானியம், சீனம், பாரசிகம், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டில் இதைத் தமது தெய்வ வழிபாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். இது ஊதுபத்தி போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பொடியாவும், தைலமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இந்தியாவில் குங்கிலியமரம் என்பது சால மரம் அல்லது ஆச்சா மரம் எனப்படுவது ஆகும். இது பெரிய மரம் ஆகும். ஆத்திரேலியாவிலுள்ள அகாத்திசஸ் ரோபஸ்டா என்ற மரம் பிசின் எடுக்கும் குங்கிலியமரம் ஆகும். இது சாம்பிராணி என்பது அல்ல.
Remove ads
மருத்துவ குணங்கள்
மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம் ஆகியவற்றை குணப்படுத்த மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads