குடிதழீஇய இயக்கச் சங்கம்

From Wikipedia, the free encyclopedia

குடிதழீஇய இயக்கச் சங்கம்
Remove ads

குடிதழீஇய இயக்கச் சங்கம் (Union for a Popular Movement, French: Union pour un Mouvement Populaire, யூஎம்பி) பிரான்சு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மைய-வலது கொள்கையுடைய[5] இந்தக் கட்சி 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் தலைமையில் பல மைய-வலது கட்சிகளின் சேர்க்கையால் உருவானது.

விரைவான உண்மைகள் குடிதழீஇய இயக்கச் சங்கம், தலைவர் ...

இக்கட்சியின் தற்போதையத் தலைவர் நிக்கொலா சார்கோசி 2007ஆம் ஆண்டில் பிரான்சின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய சட்டப் பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் மேலவையான செனட்டில் எதிர்கட்சியான சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சியும் பிற கட்சிகளும் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளன.

இதன் பொதுச்செயலாளராக ஜீன்-பிரான்சுவா கோபே உள்ளார். ஐரோப்பிய மக்கள் கட்சி, பன்னாட்டு மைய மக்களாட்சியினர் மற்றும் பன்னாட்டு மக்களாட்சி சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads