குடிமல்காபூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குடிமல்காபூர் (Gudimalkapur) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரின் ஒரு முக்கிய புறநகர் பகுதி ஆகும். நகரின் பழமையான பகுதிகளில் ஒன்றான் இது, மற்றொரு பிரபலமான புறநகர்ப் பகுதியான மெகுதி பட்டினத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி ஒரு சிறிய நகரச் சூழலைக் கொண்டுள்ளது. இது காய்கறி மண்டி மற்றும் பூ சந்தைக்கு மிகவும் பிரபலமானது. சந்தைக்கு அருகில் "ஜாம்சிங் வெங்கடேசுவரா கோவில்" என்று அழைக்கப்படும் மிகப் பழமையான வெங்கடாசலபதி கோவில் உள்ளது.

விரைவான உண்மைகள் குடிமல்காபூர், நாடு ...
Remove ads

வணிகப் பகுதி

இந்த பகுதியில் அனைத்துப் பொருட்களையும் பெரும் பல கடைகள் உள்ளன. இங்கு 'குடிமல்காபூர் சந்தை' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய காய்கறிச் சந்தை உள்ளது.[1] 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான மோசம் சாகி மலர் சந்தை [2] குடிமல்காபூருக்கு மாற்றப்பட்டது. இதனால் இப்பகுதி தினமும் காலையில் பரபரப்பான இடமாக உள்ளது. [3]

போக்குவரத்து

குடிமல்காபூர், மெகுதிப் பட்டினத்தில் தெலங்காண மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் உள்ளது. புகழ்பெற்ற அம்பா தியேட்டருக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads