குண்டலகேசி
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி.இது பௌத்த சமய நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குண்டலகேசி (Kundalakesi) தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற நூல் ஆகும். இது ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.[1] குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.
தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
Remove ads
விளக்க உரை
குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார். [2]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads