வணிகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வணிகர் என்பவர் ஒரு பொருளை வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் வணிகத் தொழிலில் ஈடுபடுபவராவார். மனித வரலாற்றில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்களாவார்கள். பாபிலோனியா, அசிரியா, சீனம், எகிப்து, கிரேக்கம், இந்தியா, ஈரான், போனீசியா மற்றும் உரோமைப் பேரரசு போன்ற பண்டைய நாடுகளிடையே வணிகர்கள் குழுவாகத் தொடர்பில் இருந்துள்ளார்கள்.[1][2][3][4][5][6] இடைக்காலங்களில் வணிகப் பரவல் அதிகரித்து, ஐரோப்பிய கண்டுபிடிப்புக் காலத்தில் புதிய வணிகப்பாதைகள் உருவாகின. பதினெட்டாம் நூற்றாண்டில் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கிய பிறகு நவீன வணிக முறைகள் நடைமுறைக்கு வந்தன.

Remove ads
வகைகள்
மொத்த வணிகர், சில்லறை வணிகர் என்று வணிகர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மொத்தமாகப் பொருட்களை வாங்கி, தயாரிப்பாளர்களுக்கும் சில்லறைச் சந்தைக்கும் இடையே வணிகம் செய்பவர்கள் மொத்த வணிகர்கள் எனப்படுவர். சில்லறைச் சந்தையிலிருந்து பொருட்களை வாங்கி நுகர்வோருக்கு வணிகம் செய்பவர்கள் சில்லறை வணிகர் எனப்படுவர்.[7]
இவற்றையும் பார்க்கலாம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads