குதிரைமலை (இலங்கை)
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள From Wikipedia, the free encyclopedia
Remove ads
குதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippuros, ஆங்கிலம்: Horse Cliff) என்பது இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்த முனை பகுதியும் பண்டைய துறைமுக நகரமும் ஆகும். இது முன்பு யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர் நல்லூருக்கு முன் தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கியது. சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இது மன்னார் பண்டைய துறைமுக நகரம், வரலாற்று புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆகிய வரலாறுகளை பகிர்ந்து கொண்டுள்ளது. குதிரைமலை புத்தளம் மாவட்ட வடமுனையில் அமைந்து, பயனுள்ள மன்னார் தென் துறைமுகமாகவும், யாழ் தீபகற்ப மற்றும் வன்னி அரசுகளின் தென்முனை எல்லை நகரமாக பயன்பட்டது. இது திருகோணமலையிலிருந்து வன்னிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் கரையிலிருந்து முத்தகழ்வு இடமும் பண்டைய கிராமமுமான வங்காலை 20 கி.மீ தூரத்தில் வடக்கில் அமைந்துள்ளது. இப்பகுதி தற்போது தேசிய பூங்காவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்பகுதி ஆட்சியாளர்களில் அல்லி ராணி, கொற்றன், அவரது தந்தை (பிட்டன்) மற்றும் சமகாலத்தவர்களான அதியமான் நெடுமான் அஞ்சி மற்றும் அவரது மகன் குமணன் ஆகியோர் அடங்குவர்.[1]
Remove ads
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads