குனாட்சா சமர்

பாரசிகத்தில் நடந்த சமர் From Wikipedia, the free encyclopedia

குனாட்சா சமர்map
Remove ads

குனாட்சா சமர் (Battle of Cunaxa) என்பது கிமு 401 கோடையின் பிற்பகுதியில் பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சஸ் மற்றும் அவரது தம்பி இளைய சைரஸ் ஆகியோருக்கு இடையே அகாமனிசிய சிம்மாசனத்தைக் கைப்பற்ற நடந்த சமராகும். சைரசின் கிளர்ச்சியால் நடந்த இந்த பெரும் போரானது பாபிலோனுக்கு வடக்கே 70 கி.மீ., தொலைவில் யூப்ரடீசின் இடது கரையில் உள்ள குனாட்சா ( கிரேக்கம்: Κούναξα ) என்ற இடத்தில் நடந்தது. இந்தப் போரின் முதன்மை சான்றாக இப்போரில் கலந்துகொண்ட கிரேக்க வீரர் செனபோன் எழுதிய நூல் உள்ளது.

விரைவான உண்மைகள் குனாட்சா சமர், நாள் ...
Remove ads

தயார்படுத்தல்கள்

சைரஸ் 10,400 ஹாப்லைட்டுகள் மற்றும் 2,500 இலகுரக காலாட்படை மற்றும் கேடயர்கள் அடங்கிய கிரேக்க கூலிப்படையை எசுபார்த்தன் தளபதி கிளியர்ச்சசின் தலைமையில் திரட்டி, குனாட்சாவில் அர்தசெராக்சை எதிர்கொண்டார். பாரசிகத்தின் இராணுவ பலம் 40,000 பேர் ஆகும்.

Thumb
அர்டாக்செர்க்சின் உருவப்படம்.

சைரஸ் தன் அண்ணனான பாரசிக மன்னர் தன் இராணுவத்தை நெருங்கி வருவதை அறிந்ததும், அவர் தனது இராணுவத்தை போருக்கு அணிவகுக்க வைத்தார். அவர் கிரேக்க கூலிப்படையை வலதுபுறம், ஆற்றின் அருகே நிற்க வைத்தார். இதைத் தவிர, அன்றைய போர் ஒழுங்கின் பாரம்பரியத்தின்படி, 1,000 பலம் கொண்ட குதிரைப்படைகள் அவர்கள் வலதுபுறத்தில் ஆதரவாக இருந்தது. கிரேக்கர்களுக்கு இது மரியாதைக்குரிய இடம். 600 மெய்க் காப்பாளர்கள் சூழ சைரஸ் கிரேக்க கூலிப்படையின் இடதுபுறத்தில் இருந்தார். சைரசின் ஆசியப் படைகள் இடது புறத்தில் இருந்தன.[4]

அதற்கு நேர்மாறாக, இரண்டாம் அர்தசெர்க்ஸஸ் தனது இடதுபுறத்தில் உள்ள படையை ஆற்றோரம் நிறுத்தினார், குதிரைப்படையின் ஒரு அலகு அதற்கு துணையாக இருந்தது. ஆர்தசெர்க்ஸஸ் படைகளின் வரிசையின் மையத்தில் இருந்தார். 6,000 பாரசீக குதிரைப்படைகள் (உலகின் மிகச் சிறந்தவை) சைரசின் இடதுபுறத்தில் இருந்தன. அவருடைய அணிவகுப்பு வரிசை மிகவும் நீளமானதாக இருந்தது.

இறுதித் தாக்குதல் தொடங்கும் முன், குனாக்சாவில் நடந்த நிகழ்வுகளின் முக்கியப் பிரதிநிதியான செனபோன், அந்த நேரத்தில் ஒரு நடுத்தர அதிகாரியாக இருந்தார். அவர் சைரசை அணுகி, அனைத்து முறையான உத்தரவுகளும் செயல்களும் செய்யப்பட்டன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். சைரஸ் செய்யப்பட்டதாகவும், போருக்கு முன் பாரம்பரியமாக நடக்கும் பலிகள் வெற்றியை உறுதிகூறின என்றும் கூறினார்.[5]

Remove ads

சமர்

கிரேக்கர்கள், சைரசின் வலதுபுறத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ள, அர்தசெர்க்சின் இராணுவத்தின் இடது பக்கத்தை தாக்கினர். அவர்களின் அம்புத் தாக்குதல்கள் வருவதற்குள் படை அணிகளை உடைத்து தப்பி புகுந்து தாக்கினர். இருப்பினும், பாரசீக வலது படைகளுக்கும் அர்தசெர்க்சின் இராணுவத்திற்கும் சைரசுக்கும் இடையிலான சண்டை மிகவும் கடினமானதாக நீடித்ததாகவும் இருந்தது. சைரஸ் தனிப்பட்ட முறையில் தனது சகோதரரின் மெய்க்காப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டார் மற்றும் ஒரு ஈட்டியால் கொல்லப்பட்டார். இது கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்தது. (ஈட்டியை எறிந்தவர் மித்ரிடேட்ஸ் என்று அறியப்பட்டார், மேலும் அர்தசெர்க்ஸ் தன் கையால் தன் சகோதரனைக் கொலை செய்யவேண்டும் என்று இருந்த நிலையில் கொலையை அவர் செய்ததால் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கபட்டது). சைரசின் மரணத்தைக் கேள்விப்படாத, ஆயுதம் ஏந்திய கிரேக்கக் கூலிப்படையினர் மட்டும் போரில் உறுதியாக நின்றனர். அர்தசெர்க்சின் இராணுவத்தின் மிகப் பெரிய வலது படைகளை எதிர்த்து கிளீச்சஸ் முன்னேறி பின்வாங்கினார். இதற்கிடையில், அர்தசெர்க்சின் துருப்புக்கள் கிரேக்க முகாமைக் கைப்பற்றி, அவர்களின் உணவுப் பொருட்களை அழித்தன.

Remove ads

பின்விளைவு

Thumb
ஆளுநர் திசாபெர்னசால் கிரேக்க தளபதிகள் விருந்துக்கு அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

கிரேக்க படை வீரரும் எழுத்தாளருமான செனபோனின் கூற்றுப்படி, கிரேக்க கனரக துருப்புக்கள் குனாக்சாவில் இரண்டு முறை தங்களை எதிர்த்த பாரசீகப் படைகளை முறியடித்தன. அதில் ஒரு கிரேக்க சிப்பாய் மட்டுமே காயமடைந்தார். போருக்குப் பிறகுதான், சைரஸ் கொல்லப்பட்டதை அவர்கள் கேள்விப்பட்டனர். இதனால் அவர்களின் வெற்றி பயனற்றதானதால், போர்ப் பயணம் தோல்வியடைந்தது. அவர்கள் ஒரு மிகப் பெரிய பேரரசின் நடுவில் இருந்தனர், அவர்களுக்கு உணவு இல்லை, வேலை கொடுப்பவர்கள் இல்லை, நம்பகமான நண்பர்கள் இல்லை. அவர்கள் தங்கள் பாரசீக கூட்டாளியான அரியாயசை அரியணையில் அமர்த்த முன்வந்தனர். ஆனால் அவர் அரச குருதியைச் சேராதவர் என்பதால், அரியணையை தக்கவைத்துக் கொள்ள பாரசீகர்களிடையே போதுமான ஆதரவு கிடைக்காது என மறுத்துவிட்டார். அவர்கள் தங்கள் சேவையை அர்டாக்செர்க்சின் முன்னணி ஆளுநர் திசாபெர்னசுக்கு வழங்கினர், ஆனால் அவர் அவர்களை ஏற்க மறுத்துவிட்டார், மேலும் அவர்கள் அவரிடம் சரணடையவும் மறுத்துவிட்டனர். கிரேக்கர்களும் தங்கள் தாய்நாடு திரும்ப ஆவல் கொண்டனர். வந்த வழியே செல்ல விரும்பாமல் வடக்கு நோக்கி புறப்பட்டனர். முன்பின் பார்த்திராத வழியில் செல்லத் துவங்கினர்.

திசாபெர்னசின் விருந்து அழைப்பை கிரேக்க மூத்த அதிகாரிகள் முட்டாள்தனமாக ஏற்றுக்கொண்டனர். அங்கே அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அரசனிடம் கொண்டு செல்லப்பட்டு, அங்கே தலை துண்டிக்கப்பட்டனர். கிரேக்கர்கள் தங்களுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து, கடற்கரையிலுள்ள கிரேக்கக் குடியேற்றத்தை அடைய, கோர்ட்யூன் மற்றும் ஆர்மீனியா வழியாக கருங்கடலுக்கு வடக்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் பயணமானது, பத்தாயிரவரின் அணிவகுப்பு, என்று தனது அனபாசிஸ் நூலில் செனபோனால் பதிவு செய்யப்பட்டது.

செட்சியாஸ்

குனாட்சா சமரில் செனபோனைத் தவிர, பழங்காலத்தைச் சேர்ந்த மற்றொரு பிரபலமான எழுத்தாளர் ஈடுபட்டார். அந்த நேரத்தில் அகாமனிசியப் பேரரசுக்கு உட்பட்ட காரியாவைச் சேர்ந்த செட்சியாஸ், குனாட்சா போரில் அர்தசெர்க்சஸ் மன்னரின் பரிவாரத்தைச் சேர்ந்தவராக இருந்தார். மேலும் மன்னரின் சதையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளித்தார்.[7] போருக்குப் பிறகு அவர் கிரேக்கர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் எசுபார்த்தன் தளபதி கிளியர்ச்சசுக்கு பாரசிகத்தில் மரணதண்டனை பெறுவதற்கு முன்னர் அவருக்கு உதவினார்.[8] செடெசியாஸ் ஆறுகள் மற்றும் பாரசீக வருவாய்கள் குறித்த கட்டுரைகளை எழுதியவர், இண்டிகா (Ἰνδικά) என்ற பெயரில் இந்தியா குறித்தும், அசிரியா மற்றும் பாரசிகத்தின் வரலாற்றை 23 புத்தகங்களில் பெர்சிகா (Περσικά) இல் எரோடோட்டசுக்கு போட்டியாக எழுதினார்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads