குமாரகோவில்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமாரகோவில் (Kumarakovil) என்பது கன்னியாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 34 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுர வானூர்திநிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் இந்தச் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் தக்கலை பேருந்துநிலையம் உள்ளது. இங்கிருந்து குமாரகோவிலுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[1]
இங்குள்ள வேளிமலை முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.[2] இங்குள்ள 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் வேளிமலை குமாரசாமி கோவில்[3] குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் முதன்மைத் தெய்வங்களாக உள்ளனர்; இங்குதான் இவர்கள் திருமணம் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது. கேரளாவிலிருந்து இங்கு பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் விழாக்களுக்கு கேரளக் காவல்துறையின் இசைக்குழு பங்கேற்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads