டி. வி. ரத்தினம்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெ. வ. ரத்தினம் (T. V. Rathinam, 1929 - 17 அக்டோபர் 1984)[1] 1940களிலும், 50களிலும் பிரபலமான ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணி, கருநாடக இசைப் பாடகி ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
தென்காசி வள்ளிநாயகம் இரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட ரத்தினம், வள்ளிநாயகம் பிள்ளை, ஆவுடை அம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர். தம் ஏழாவது அகவையில் இராமலிங்க ஆச்சாரி என்பவரிடம் கருநாடக இசைப் பயிற்சியைத் தொடங்கினார். இலங்கையில் தம் முழுமையான கச்சேரியை நடத்தினார். சிறு வயதில் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தவர், பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களைப் பாடிவந்தார்.
1940 இல் தனது 10வது அகவையில் பக்த சேதா என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டில் கண்ணகி திரைப்படத்தில் சிறுமி கண்ணகியாக நடித்து, பாடல் ஒன்றையும் பாடினார். இதே வேளையில் கருநாடக இசைப் பயிற்சியை ராம்நாத் கிருஷ்ணன் என்பவரிடமும், பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் பெற்றார்.
Remove ads
பின்னணிப் பாடகியாக
மிஸ் மாலினி (1947) படத்தில் இவர் பாடிய ஸ்ரீ சரசுவதி நமோ, பாடும் ரேடியோ ஆகிய பாடல்கள் மூலம் பிரபலமானார். பொன்முடி (1950) திரைப்படத்தில் பிரபல இசை அமைப்பாளர் ஜி. இராமநாதனுடன் இணைந்து பாடினார்.[2]
தனிப் பாடல்களைத் தவிர ஜி. ராமநாதன், டி. ஆர். மகாலிங்கம், டி. ஏ. மோதி, திருச்சி லோகநாதன், ஏ. எம். ராஜா, டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், எஸ். வி. பொன்னுசாமி ஆகிய பாடகர்களுடன் சேர்ந்து பாடியுள்ளார்.
Remove ads
பாடிய சில பாடல்கள்
- வாசுகி பாம்பு தாம்பாகி (கிருஷ்ண விஜயம்)
- நீலவானும் நிலவும் போலே (பொன்முடி)
- வான் மலை இன்றி வாடிடும் (பொன்முடி)
- அஞ்சுரூப நோட்டை (அந்தமான் கைதி)
- அன்பே நம் தெய்வம் (நீதிபதி)
- கோவிந்தன் குழலோசை (நல்ல வீடு)
- அத்தானும் நான்தானே (சக்ரவர்த்தி திருமகள்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
