செம்பை வைத்தியநாத பாகவதர்

கர்நாடக சங்கீத பாடகர் From Wikipedia, the free encyclopedia

செம்பை வைத்தியநாத பாகவதர்
Remove ads

செம்பை வைத்தியநாத பாகவதர் (மலையாளம்: ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതര്‍, செப்டம்பர் 1, 1895 - அக்டோபர் 16, 1974) பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் தோன்றிய பிரபலமான ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் தம் கிராமப் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர், பார்வதி அம்மாள் என்ற இணையர் இவரின் பெற்றோராவர். இவரின் தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் ஆகியோர் இசைப் பாடகர்களாக இருந்தனர். எனவே பாகவதருக்கு கருநாடக இசை, பாரம்பரியதொரு கலையாக விளங்கியது. இவரின் முப்பாட்டனார் சுப்பையர் என்பவர் சக்ரதானம் என்ற அரிய தானவகையில் பாடுவதில் தேர்ச்சி பெற்றதால் சக்ரதானம் சுப்பையர் என்று அழைக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் செம்பை வைத்தியநாத பாகவதர், பின்னணித் தகவல்கள் ...
Thumb
செம்பை வைத்தியநாதர் நடுவே கோட் அணிந்துள்ளார். ஈரோடு விசுவநாத ஐயர் வயலின் வாசிக்கின்றார். பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிக்கின்றார். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா வாசிக்கின்றார். இப்படம் சுவதேசமித்திரனில் 1936 இல் வெளியானது

கம்பீரமாகப் பாடும் ஆற்றலைப் பெற்றிருந்த பாகவதருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.

3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8 ஆம் பிராயத்தில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.

மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடைய செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். ஜய-விஜயன், யேசுதாஸ், டி. வி. கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கருநாடக இசையில் இவரின் சீடர்கள். இவரின் மறைவிற்கு பிறகு இவரின் பெயரில் பல இசை விழாக்கள் நடைபெறுகின்றன (உதாரணமாக குருவாயூரில் ஒவ்வொரு ஆண்டும் செம்பை சங்கீத உற்சவம் நடைபெறுகிறது)

Remove ads

விருதுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads