கும்பகோணம் பொற்றாமரைக்குளம்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் பொற்றாமரைக்குளம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கும்பகோணம் பொற்றாமரைக்குளம் என்பது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நகரின் நடுவில் உள்ள பொற்றாமரைக்குளம் ஆகும். இது மதுரை மீனாட்சியம்மன் கோயிலுள்ள பொற்றாமரைக்குளம் போன்ற குளமாகும்.

Remove ads
அமைவிடம்
பிரளயத்திற்குப் பின் தோன்றிய இரண்டு மிகச் சிறப்புறும் புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று பொற்றாமரைக்குளமாகும். திருமகள் பொற்றாமரையில் தோன்றியதால் இக்குளம் பொற்றாமரைக்குளம் எனப்படுகிறது. [1]மகாமகக் குளத்தை அடுத்து ஒரு பிரசித்தமான குளம் இக்குளம். பொற்றாமரைக்குளம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் புனிதத் தீர்த்தமாகும். இது நாற்புறமும் அரண் செய்யப் பெற்ற குளமாகும்.[2] இக்குளத்தின் கரை படைப்பாளிகள் ஒன்றுகூடும் இடமாக இருந்துள்ளது. [3]
Remove ads
தீர்த்தங்கள்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் தீர்த்தங்கள் பொற்றாமரை, காவேரி, அரிசொல் ஆகியனவாகும். இவ்வகையில் பொற்றாமரைக்குளம் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. [4]
மகாமகம் தொடர்பு
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தன்று குரு சிம்ம ராசியில் வரும்போது லட்சக்கணக்கான மக்கள் குடந்தை மாநகருக்கு வந்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா ஆறு, சிந்து, சரயு முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் ஒன்றுகூடும் மகாமகக்குளத்தில் நீராடியபின் இத்திருக்கோயிலில் உள்ள பொற்றாமரைக்குளத்திலும், பிறகு காவிரியிலும் நீராடுகின்றனர்[4]
மரபு வரலாறு
திருமகளே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று கடுந்தவம் இருந்த ஹேம மகரிஷிக்குப் பொற்றாமரை ஒன்றில் திருமகள் குழந்தையாகத் தோன்றினாள். இவ்வாறு அமுதத்தின் ஒரு பகுதி தங்கியிருந்ததாலும், தாயார் தோன்றியருளியதாலும் இத்தீர்த்தம் மிக்க விஷேடமானதாக இருந்து வருகிறது. புண்ணிய நதிகளான கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சரயு முதலிய ஒன்பது நதிகளும் இங்கு வந்து பொற்றாமரைக் குளத்திலும் நீராடி தங்கள் பாவங்களை போக்கி புனிதம் அடைகின்றன என்பது மரபு வரலாறு. அதனால் அச்சமயத்தில் பொற்றாமரைக் குளத்தில் நீராடுவது மிகப் புண்ணியம் ஆகும் என்பது தொன்நம்பிக்கை.[2]
Remove ads
2016 மகாமகம்
2016 மகாமகத்தை முன்னிட்டு இக்குளத்தில் நீர் நிரப்பி சோதனை செய்யப்பட்டது. [5] தீர்த்தவாரியான 22 பிப்ரவரி 2016ஆம் நாள் மகாமகக்குளத்தில் நீராடிய பக்தர்கள் இக்குளத்திலும், பின்னர் காவிரியாற்றிலும் சென்று புனித நீராடினர்.
படத்தொகுப்பு
பொற்றாமரைக்குளம்
2016 மகாமகத்தின்போது நீராடும் பக்தர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads