குருத்துவார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருத்துவார் (Gurdwara) என்பது சீக்கிய சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலமாகும்.
சொற்பிறப்பியல்
குருத்துவார் என்பதற்கு குருவை அடையும் வழி எனப் பொருள். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று குருவை வழிபடலாம் [1]
அமைப்பு
குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு மேடையில் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கிய மத நூலை வைத்து, சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி வழிபடுவர். குருத்துவாரில் லங்கர் (Langar) எனப்படும் மற்றும் உணவு விடுதியில் அனைவருக்கும் இலவசமாக உணவு பரிமாறப்படும்.[2] பெரிய அளவிலான குருத்துவார்களில் நூலகம், குழந்தைகள் காப்பகம் மற்றும் சமய வகுப்பறைகள் வசதிகள் உண்டு.[3]
நிசான் சாகிபு
குருத்துவார் கோயில் உச்சியில் சீக்கிய சமயக் கொடி பறக்கும். நிசான் சாகிபு என்பது சீக்கிய சமயத்தில் உள்ள முக்கோணக் கொடியாகும். பருத்தி அல்லது பட்டுத் துணியால் செய்யப்பட்ட இந்த கொடியின் முடிவில் குஞ்சம் இருக்கும். உலகெங்கிலும் உள்ள குருத்வாராக்கள் அனைத்திலும் பயன்பாட்டில் உள்ள தற்போதைய வடிவம் காவி பின்னணி நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த கொடியின் மையத்தில் சீக்கிய கந்த சின்னத்தைக் கொண்டுள்ளது.[4] கொடியில் உள்ள கந்த சின்னம் (☬), இரட்டை முனைகள் கொண்ட ஒரு வாளை சித்தரிக்கிறது. மையத்தில் ஒரு சக்கர வட்ட வடிவம் மற்றும் இரண்டு ஒற்றை முனைகள் கொண்ட வாள்கள் கொண்டது. இது பொதுவாக குர்த்வாராக்கு வெளியே உயரமான கொடிக்கம்பத்தில் ஏற்றப்படுகிறது. கொடிக்கம்பம் கொடியின் அதே நிறத்தில் ("சோழா" என அழைக்கப்படும்) துணியால் மூடப்பட்டிருக்கும். இந்த கொடியை ஊர்வலத்தில் சுமந்து செல்லும் கொடி ஏந்தியவர் நிஷாஞ்சி என்று குறிப்பிடப்படுகிறார்.[4] இந்தக் கொடிக்கு மிகுந்த மரியாதை காட்டப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பால் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கழுவப்படுகிறது.[5]
சடங்குகள்
குருத்துவாரில் ஆண்களும் பெண்களும் தங்கள் தலையைக் குல்லாய் அல்லது துணியை மூடியவாறு செல்வது கட்டாயம். குருத்துவாரில் சமையல், துப்புரவு பணி, மற்றும் சமயப் பணி சீக்கிய சமய ஆண்களும் பெண்களும் இணைந்து செய்வர். குருத்துவாரில் நடைபெறும் முக்கிய சடங்குகள்:
- குழந்தைகளுக்கு பெயரிடுதல்
- ஞானஸ்நானம் செய்தல்
- திருமணம் செய்து வைத்தல்
- நீத்தார் கடன் செய்தல்
ஐந்து முக்கிய குருத்துவார்கள்
புகழ்பெற்ற குருதுவார்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சர் நகரில் உள்ள பொற்கோயில் குறிப்பிடத்தக்கதாகும்..
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads