குருமுக் நிகால் சிங்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருமுக் நிகால் சிங் (Gurmukh Nihal Singh) (இந்தி: गुरुमुख निहाल सिँह, Punjabi: ਗੁਰਮੁਖ ਨਿਹਾਲ ਸਿੰਘ) இந்திய மாநிலமான இராஜஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவி வகித்தவர்.[1] மேலும் கட்சியின் தில்லி மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 1955 முதல் 1956 முடிய பதவி வகித்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராவர்.[2] சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவுக்கு அடுத்து தில்லி மாநில முதல்வரான குருமுக் நிகால் சிங் பதவி வகித்த ஒராண்டில், அரசியல் அமைப்பு சட்டத்தில் 69வது திருத்தத்தில், தில்லியானது தேசியத் தலைநகர் பகுதி என அறிவிக்கப்பட்டதால், தில்லி மாநிலத் தகுதியை இழந்தது. எனவே குருமுக் சிங் நிகாலுக்கு இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டது.[3] குருமுக் நிகால் சிங் பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads