குவாசுலு-நதால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாசுலு-நதால் (KwaZulu-Natal,/kwɑːˌzuːluː nəˈtɑːl/) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது கேஇசட்என்(KZN) என்றும் நதால் என்றும் குறிப்பிடப்படுகின்றது. "பூங்கா மாகாணம்" எனவும் அறியப்படுகின்றது.[4]) 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது சூலு பந்துசுத்தானாகிய குவாசுலுவும் (சூலு மொழியில் "சூலுக்களின் இடம்") நதாலும் இணைக்கப்பட்டு இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடலின் கடலோரமாக அமைந்துள்ளது; மூன்று மாகாணங்களுடனும் மொசாம்பிக், சுவாசிலாந்து, லெசோத்தோ நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக பீட்டர்மாரிட்சுபர்கும் மிகப் பெரும் நகரமாக டர்பனும் உள்ளன.
தற்போதைய மாகாணத்தின் வடபகுதியில் 1830களிலும் 1840களிலும் சூலு இராச்சியமும் தென்பகுதியில் போயர்களின் நதாலியா குடியரசும் அமைந்திருந்தன. 1843இல் பிரித்தானியர்கள் நதாலியா குடியரசை கைப்பற்றி நதால் குடியேற்றம் அமைத்தனர். குவாசுலு 1979 வரை தன்னாட்சியுடன் இருந்தது.
தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க நபர்கள் இங்கு பிறந்துள்ளனர்:
- 1960இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் வெள்ளையரல்லாதவரும் ஐரோப்பாவிற்கு வெளியே முதன்முதலாக பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் லுத்துலி;
- ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) நிறுவியவரும் முதல் கறுப்பின வழக்கறிஞருமான பிக்ஸ்லி கா இசாகா செமே;
- ஆ.தே.காங்கிரசின் நிறுவனத் தலைவரான ஜான் துபே;
- இங்காத்தா விடுதலை கட்சியின் நிறுவனருமான மங்கோசுது புத்லெசி;
- ஆ.தே.கா இளைஞரணியின் நிறுவனத் தலைவர் அண்டன் லெம்பேத்;
- தற்போதைய தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் யாக்கோபு சூமா;
- 19ஆவது நூற்றாண்டு சுலு தலைவராக இருந்து இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பம்பாத்தா
குவாசுலு-நதாலின் இரு இடங்கள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன: இசிமாங்கலிசோ சதுப்புநிலப் பூங்கா மற்றும் உகலாம்பா டிரேக்கென்சுபெர்கு பூங்கா.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads