குவிசோன் நகரம் (Quezon City, பிலிப்பினோ மக்களால் பரவலாக இதன் ஆங்கில சுருக்கெழுத்துகளால் QC என அறியப்படுகின்றது) பிலிப்பீன்சு நாட்டின் தேசிய தலைநகரப் பகுதியான மணிலா பெருநகரத்தின் அங்க நகரங்களில் ஒன்றாகும். இதுவே நாட்டின் உயர்ந்த மக்கள்தொகை மிக்க நகரமாகும். மணிலா பெருநகரத்தின் பரப்பளவு வாரியாக பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 1948 முதல் 1976 வரை தலைநகரமாக இருந்த மணிலாவிற்கு மாற்றாக இதனை நிறுவி மேம்படுத்திய பிலிப்பீன்சின் இரண்டாவது அரசுத்தலைவர் மானுவல் எல். குவிசோன் நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது.[3] இவருடைய பெயரிடப்பட்டுள்ள குவிசோன் மாநிலத்திற்கும் இந்த நகரத்திற்கும் தொடர்பில்லை; இந்த நகரம் இந்த மாநிலத்தில் அமைந்திடவில்லை.
விரைவான உண்மைகள் குவிசோன் நகரம் Lungsod Quezon, நாடு ...
குவிசோன் நகரம்
Lungsod Quezon |
---|
மிகவும் நகரியமான நகரம் |
கொடி சின்னம் |
அடைபெயர்(கள்): விண்மீன்களின் நகரம், இக்யூசி, புதிய தொடுவானங்களின் நகரம் |
 குவிசோன் நகர அமைவிடத்தை மணிலா பெருநகரத்தில் காட்டும் நிலப்படம் |
நாடு | பிலிப்பீன்சு |
---|
வலயம் | தேசிய தலைநகர வலயம் |
---|
மாவட்டங்கள் | குவிசோனின் ஒன்றிலிருந்து ஆறு வரையான மாவட்டங்கள் |
---|
பரங்கேக்கள் | 310 |
---|
நிறுவல் (நகரம்) | அக்டோபர் 12, 1939 ( திலிமேன் எசுட்டேட்டாக) |
---|
நிறுவல் (நகரம்) | அக்டோபர் 12, 1939 |
---|
அரசு |
---|
• மேயர் | எர்பெர்ட் எம். பூடிஸ்டா |
---|
• உதவி மேயர் | ஜோசபினா பெல்மோன்டெ அலிமுருங் |
---|
• சார்பாளர்கள் |
- • Francisco A. Calalay, Jr.
1st District - • Winston T. Castelo
2nd District - • Jorge John B. Banal, Jr.
3rd District - • Feliciano Belmonte, Jr.
4th District - • Alfredo Paolo D. Vargas III
5th District - • Jose Christopher Y. Belmonte
6th District
|
---|
பரப்பளவு |
---|
• மொத்தம் | 166.20 km2 (64.17 sq mi) |
---|
ஏற்றம் | 17.0 m (55.8 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• மொத்தம் | 27,61,720 |
---|
• அடர்த்தி | 16,617/km2 (43,040/sq mi) |
---|
நேர வலயம் | ஒசநே+8 (குவிசோன் நகர சீர்தர நேரம் (PST)) |
---|
சிப் குறியீடு | |
---|
இடக் குறியீடு | 2 |
---|
இணையதளம் | www.quezoncity.gov.ph |
---|
மூடு