கு. அரசேந்திரன்

இந்தியாவைச் சார்ந்த தமிழ் எழுத்தாளர், பேராசிரியர், வேர்ச்சொல்லறிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் கு. அரசேந்திரன் இந்தியா, தமிழ்நாட்டில் அறியப்பட்ட ஒரு எழுத்தாளரும் ஆய்வாளரும் ஆவார்.

விரைவான உண்மைகள் கு. அரசேந்திரன், பிறப்பு ...

வாழ்க்கை வரலாறு

இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் உள்ள கொக்கரணை என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் குருசாமி என்பதாகும். உள்கோட்டையில் தொடக்க, உயர்நிலைக்கல்வி பயின்ற இவர் பூண்டி திருபுட்பம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணத்தில் உவமைகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்தில் தென்மொழி ஏடுகளைக் கற்றும் பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈர்ப்புண்டும் தமிழாய்வு செய்தவர். சொல்லாய்வறிஞரான இவர் கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல், உயிர்க்கதறல் (பாட்டு நூல்)உள்ளிட்டவை புகழ் பெற்ற நூல்களாகும். வேர்ச்சொல்லாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து பின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி 2014இல் பணி ஓய்வு பெற்றார். 2022 இல் இவருக்கு தமிழ்நாடு அரசு தேவநேயப் பாவாணர் விருதினை வழங்கி கௌரவித்தது. ஈழத்து மூத்த தமிழ் அரசியல்வாதியான மா. க. ஈழவேந்தனின் மகள் யாழினி இவரின் வாழ்க்கைத் துணைவி ஆவார். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.[1]

Remove ads

சுழியம் சொல் ஆராய்ச்சி

உலகின் பயன்படும் சுழியம் (Zero) எனும் சொல் பயன்பாட்டின் மூலம் இந்தியா என்று குறிக்கப்பட்டாலும், அது தமிழ் வழக்கில் இருந்தே தோன்றியது என்பதை தனது ஆராய்ச்சிகள் ஊடாக வெளிப்படுத்தியவர் ஆவார். சொல்லாய்வறிஞர் அருளியாரின் வேர்ச்சொல் ஆய்வுக்கட்டுரைகளில் விளக்கப்பட்ட சுழியம் பற்றிய ஆய்வை மேலும் விளக்கப்படுத்திய அறிஞர் ஆவார்.[2] இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads