தாம்பரம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாம்பரம் (ஆங்கிலம்: Tambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது சென்னை புறநகர் பகுதி ஆகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தாம்பரம் மாநகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.924900°N 80.100000°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 43 மீட்டர் (141 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,432 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதி மக்கள் தொகை 1,74,787 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17,535 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,496 மற்றும் 1,611 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80.41%, இசுலாமியர்கள் 6.54%, கிறித்தவர்கள் 12.25%, தமிழ்ச் சமணர்கள் 0%, மற்றும் பிறர் 0.45% ஆகவுள்ளனர்.[3]
Remove ads
நுரையீரல் நோய் மருத்துவமனை
தாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது.[4][5]
சிறப்புகள்
சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை முதலில் மின்சார தொடர்வண்டி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நன்கறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறித்துவ கல்லூரி இங்கு உள்ளது. இந்திய வான்படையின் தளமும் இங்கு உள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
அமைவிடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads