கூகுள் டாக்ஸ்

Google டாக்ஸ் ஒரு மேகக்கணி சார்ந்த சொல் செயலாக்க மென்பொருள் பயன்பாடு, G சூட் பகுதியாக சேர்க்கப்பட் From Wikipedia, the free encyclopedia

கூகுள் டாக்ஸ்
Remove ads

கூகுள் டாக்ஸ் கூகுளின் ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆகும். இது பயனர்களை இணைமூடாக விரிவுத்தாளை உருவாக்கவும் நிகழ்நேரத்தில் மற்றவர்களுடன் பகிரவும் பயன்படுகின்றது. கூகுள் விரிவுத்தாள்கள் சேவை ஜூன் 6 2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்றவகையில் மட்டுப்படுத்தப்பட்ட பயனர்களுக்கே அளிக்கப்பட்டபோதும் பின்னர் எல்லா கூகுள் பயனர்களிற்கும் அளிக்கப் பட்டது. ரைட்லி என்று முன்னர் அறியப்பட்ட சேவையும் சேர்க்ககபட்டு அக்டோபர் 10 கூகுள் கூகுள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் பின்னர் இச்சேவையானது கூகுள் டாக்ஸ் என இப்போது அறியப்படுகின்றது.

விரைவான உண்மைகள் உருவாக்குனர், இயக்கு முறைமை ...
Remove ads

வசதிகள்

டாக்ஸ் இணையமூடாக உருவாக்கக் கூடியதும் மின்னஞ்சலூடக அனுப்பக் கூடியதும் ஆகும். இவை பல்வேறுபட்ட கோப்பு வடிவங்களில் சேமிக்கப் படக் கூடியவை. வழமையாக இவை கூகுள் வழங்கியிலேயே சேமிக்கப்படும். திறக்கப்பட்ட ஆவணங்கள் தரவுகளை இழக்காவண்ணம் தானாகவே சேமிக்கப்படும். விக்கிபீடியாவைப் போன்றே பலரும் சேர்ந்து ஓர் கூட்டு ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதோடு அவை பகிரவும் படலாம். அவை பல்வேறுபட்ட பயனர்களால் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுத் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல் செய்யப்படலாம். ஒபேரா சவாரி உலாவிகளைத் இற்றை வரை ஆதரிக்காது.

தமிழ் இடைமுகம்

கூகுள் நிறுவனம் தமது கூகுள் டாக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது.

டாக்ஸ்

ஆவணம் HTML: ஊடாக, சாதாரண எழுத்துக்களாக, RTF, மைக்ரோசாப்ட் வேட், ஓப்பிண் டாக்கியூமண்ட்(Open Document), ஸ்ரார்(ஸ்டார்) ஆபிஸ் கோப்புக்களாகச் சேமிக்கப் படலாம்.

ஸ்பெரெட்ஷீட்ஸ்

  • வேலை செய்யும்போது தானாகவே சேமித்துக் கொள்ளும்
  • மைக்ரோசாப்ட் எக்செல் மற்றும் காற்புள்ளியினால் வேற்றாக்கப்பட்ட கோபுக்களை (comma-separated values (CSV) files) வாசித்துச் சேமிக்கும் வசதி.
  • மின்னஞ்சலூடாகக் கோப்புக்களைப் பரிமாறும் வசதி
  • தூதுவனூடாக விரிவுத்தாளை நிகழ்நிலையில் பரிமாறும் வசதி
  • பல்வேறுபட்ட கணித சூத்திரங்களூடாக வரிசைப்படுத்தல்
Remove ads

பாவனை

கூகுள் விரிதாட்கள் மைக்ரோசாப்ட் எக்செல் போன்ற மாற்றுமென்பொருட்களில் உள்ள பல்வேறு வசதிகளையும் வழங்குகின்றது.

பிரத்தியேகமானதும் பாதுகாப்பான விடயங்களுக்கான வசதிகள் கூகுள் விரிதாட்கள் இன்னமும் கிடையாது. இணையத்தில் பாதுகாப்பான கோப்புபரிமாற்றத்தை இன்னமும் ஆதரிக்காது (https). இது ஒபீரா போன்ற உலாவிகளையும் ஆதரிக்காது. இதன் தற்போதயை பதிப்பில் வரைபடங்களைப் போட்டுக் காட்டும் வசதி கிடையாது.

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads