கூச் பெகர் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூச் பெகர் மாவட்டம் (Cooch Behar district) (Pron: ˈku:ʧ bihɑ:) (Bengali: কোচবিহার জেলা, Rajbongshi/Kamatapuri : কোচবিহার) இந்தியா, மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்த 23 மாவட்டங்களில் ஒன்றாகும். பிரித்தானியா இந்தியா அரசு காலத்தில் கூச் பெகர், ஒரு மன்னராட்சிப் பகுதியாக இருந்தது. குறைந்த மக்கட்தொகை கொண்ட மேற்கு வங்கத்தின் 19 மாவட்டங்களில், கூச் பெகர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இமயமலையின் தராய் பகுதியில் அமைந்த மாவட்டம். ஒரு நாடாளுமன்ற தொகுதியும், எட்டு சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டது இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச் பெகர் நகரம் ஆகும். [1]

Remove ads
வரலாறு
28 ஆகஸ்டு 1949ஆம் ஆண்டிற்கு முன்னர், கூச் பெகர் பகுதி, பிரித்தானிய இந்திய அரசின் கீழ் ஒரு மன்னராட்சி நாடாக விளங்கியது. சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 12 செப்டம்பர் 1949 அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்து, பின் 19 சனவரி 1950ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்தின் ஒரு மாவட்டமாக மாறியது.
ஆறுகள்
தீஸ்தா ஆறு, ஜல்தாகா ஆறு, தோர்சா ஆறு, கல்ஜானி, ராய்டக் ஆறு, கதாதர் ஆறு மற்றும் கர்காரியா ஆறு என ஏழு ஆறுகள், கூச் பெகார் மாவட்டத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்கே பாய்கிறது.
வேளாண்மை
2530.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், நெல், புகையிலை, சணல், தென்னை, கடுகு, உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
வருவாய்க் கோட்டங்கள்
உட்கோட்டங்கள்
கூச் பெகார் மாவட்டம் நான்கு உட்கோட்டங்கள் கொண்டது;
- கூச் பெகார் சதர் உட்கோட்டம்
- தீன்கட்டா உட்கோட்டம்
- மாதபங்கா உட்கோட்டம்
- துபாகஞ்ச் உட்கோட்டம்
- மேக்லிகஞ்ச் உட்கோட்டம்
பார்க்க வேண்டிய இடங்கள்
- கூச் பெகர் அரண்மனை
- மதன் மோகன் கோயில்
- ராஜ்பாத் நினைவிடம்
- பனேஸ்வர் சிவன் கோயில்
- மதுப்பூர் அணைக்கட்டு
- காமதேஸ்வரி கோயில்
- சாகர் திகி நீர்த் தேக்கம்
- ரசிக்பீல் பறவைகள் சரணாலயம்
- ரசோமதி இயற்கை வன சுற்றுலா வளாகம்
- ஜல்தாப்ரா தேசியப் பூங்கா.[2]
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கூச் பிகார் மாவட்ட மக்கள் தொகை 2,822,780 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 833 நபர்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 75.49%.
கல்வி
- கூச் பெகார் பஞ்சனன் பார்மா பல்கலைக் கழகம் - 1
- வடக்கு வங்காள வேளாண்மைப் பல்கலைக் கழகம், கூச் பிகார் - 1
- துவக்கப்பள்ளிகள் – 1805
- உயர்நிலைப் பள்ளிகள் – 120
- மேல்நிலைப் பள்ளிகள் – 61
- கேந்திரிய வித்தியாலயம் – 1
- ஜவஹர் நவோதய வித்தியாலயம் – 1
- பொறியியல் & தொழில் நுட்ப கல்லூரிகள் – 2
- தொழில் & தொழில் நுட்ப பள்ளிகள் – 16
- கலை & அறிவியல் கல்லூரிகள் – 9
- பார்வை அற்றோர் பள்ளி – 1
- நூலகங்கள் – 110
மேலும் பல தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.
Remove ads
படக்காட்சியகம்
- கூச் பெகார் அரண்மனை
- ரசிக்பீல் பறவைகள் சரணாலயம்
- சாகர் திகி நீர்த்தேக்கம்
- காவல் கோபுரம், ரசிக்பீல் பறவைகள் சரணாலயம்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads