கூமர் நடனம்
இராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூமர் நடனம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இந்து பெண் தெய்வமான சரஸ்வதி தேவியை வணங்கும் விதமாக பில் பழங்குடி சமூகத்தால் ஆடப்பட்டு வந்த இந்த பாரம்பாிய நடனம் பின்னர் மற்ற ராஜஸ்தானிய பழங்குடி சமூகங்களால் பின்பற்றப்பட்டு இன்று பரவலாக இப்பகுதியில ஆடப்பட்டு வருகிறது.குஜராத் மத்தியபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வசிக்கும் பில் சமூகத்தினராலும் இந்த நடனம் ஆடப்பட்டு வருகிறது. [1][2][3][4][5] 2013 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 சிறந்த நாட்டுப்புற நடனங்களுள் நான்காவதாக கூமா் நடனம் தரப்படுத்தப்பட்டுள்ளது. [6][7]
பாரம்பரிய சடங்குகளின் படி, புதிதாக திருமணமான மணமகள் தனது புகுந்த வீட்டில் வரவேற்ககும் விதமாக கூமா் நடனத்தை ஆடுவா். [11] .[8] திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத சந்தர்ப்பங்கள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் கூமர் பெரும்பாலும் ஆடப்படுகிறது. .[9] இது சில நேரங்களில் மணிநேரங்களுக்கு நீடிக்கும்.
Remove ads
தோற்றம்
கூமர் என்பது சரஸ்வதி தேவியை வழிபடுவதற்காக நிகழ்த்தப்பட்ட பில் பழங்குடியினரின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம், பின்னர் இது மற்ற ராஜஸ்தானி சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. .[1][2][3][4][5] ராஜபுத்திர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் கூமர் நடனம் பிரபலமாக விளங்கியது. மேலும் இது பொதுவாக பெண்கள் கூடும் நிகழ்ச்சிகளிலும் சில விழாக்களிலும் ஆடப்பட்டு வருகிறது. [10]
நடன பாணி
இந்த நடனம் பொதுவாக ஒரு பரந்த வட்ட வடிவத்தில் வெளிப்புறமாகவும உட்புறமாகவும் நகரும் பெண்களால் சுழன்று ஆடப்படுகிறது. கூம்னா என்ற சொல் நடனக் கலைஞர்களின் சுறுசுறுப்பான இயக்க முறையை குறிப்பதால் இந்த நடனத்திற்கு கூமர் என்ற பெயர் பெறக் காரணமாக அமைந்துள்ளது.. .[11][12]
ஆடை வடிவமைப்பு
காக்ரா என்ற பிரத்யேக உடையணிந்து இந்த நடனம் ஆடப்படுகிறது..[13] பில் சமூகத்தின் இளம்பெண்கள் தங்களின் பெண்ணியக் குறியீடாகக் இந்த நடனத்தை ஆடுகின்றனா். இதன் காரணமாக நடனத்தின் அவா்கள் அணியும் ஆடைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.கூமா் நடனப் பெண்களின் ஆடைகளின் வண்ணங்களும் அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளும் இந்த நடனத்திற்கு அழகு சோ்க்கின்றன.சுவாரஸ்யமாக, துணி வேலைப்பாடுகள் மற்றும் சித்திரத்தையல் ஆகியவை குடும்பங்களின் வளமைக் குறியீடாக பார்க்கப்படுகின்றன.கூமர் உலகளவில் மிகவும் விரும்பப்பட்டாலும், இது சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்து 2018 ஆண்டு வெளிவந்த சரித்திரப் படமான பத்மாவத் மூலம் பிரபலமடைந்தது. தற்போது, உலகெங்கிலும் இந்திய சமூகத்தினரால் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் பண்டிகைகளுக்கும் கூமர் நடனக் கலைஞா்களின் தேவை அதிகமாக உள்ளது. பரவலாக அறியப்பட்ட நடன பாணி நடன வடிவத்தை ஏற்றுக்கொண்ட பல்வேறு சமூகங்களை இந்த நடனம் ஒன்றிணைக்கிறது.பாரம்பரியமான சேலை சித்திரத்தையல் வேலைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஆடைகளில் சரிகை மற்றும் பளபளப்பான தன்மை ஆதிக்கம் செலுத்தும் ஆடைகளிலிருந்து நவீனமயமாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய கூமர் நடன ஆடைகளின் ஓரங்கள் ஒரு பக்க பிளவுடன் வந்துள்ளன, மேலும் தலையை மூடிக்கொள்ளும் முக்காடுகள் பெரும்பாலும் சமகாலத்தில் அணியப்படுவதில்லை அல்லது வடிவமைக்கப்படுவதில்லை.[14]
கூமர் பாடல்கள்
ஒரு பாரம்பரிய நடனமான கூமரில் பெரும்பாலும் "கோர்பண்ட்", "போடினா", "ருமல்" மற்றும் "மோர் போலே ரே" போன்ற பாரம்பரிய பாடல்கள் பாடப்படகின்றன. மேலும் பாடல்கள் அரச புனைவுகள் அல்லது அவற்றின் மரபுகளை மையக் கருவாகக் கொண்டு பாடப்படலாம்.
- "சிர்மி மஹ்ரி சிர்மாலி"
- "அவே ஹிச்கி" - பாரம்பரிய ராஜஸ்தானி கூமர் பாடல்
- "மஹரி கூமர் சியே நக்ராலி"
- "ஜவாய் ஜி பாவ்னா" - ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல்
- "தாரா ரி சுந்தடி"
- "மஹரோ கோர்பண்ட் நக்ரலோ"
- "நைனா ரா லோபி"
- "அவுர் ரங் தே"
Remove ads
கூமா் நடன மையம்
கூமர் நாட்டுப்புற நடனத்தை பாதுகாக்கவும் அதனை ஊக்குவிக்கவும் 1986 ஆம் ஆண்டில் கிசான்கரைச் சோ்ந்த சந்திராம்பூா் மஹாராணி ராஜமாதா கோவர்தன் குமாரி அவர்களால் 'கங்கூர் கூமர் நடனக் கலைமன்றம்' நிறுவப்பட்டது.[15][16] இந்தக் கலைமன்றம் 25 பணிமனைகள் வாயிலாக 2000 க்கும் அதிகமான மாணவா்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும் 250 க்கும் அதிகமான கலாச்சார நிறுவனங்களில் கூமர் நடன நிகழ்வுகளையும் 5 பாலே நடன பாணி கூமர் நடனத்தையும் அரங்கேற்றி உள்ளது.[17] இத்தகைய கலை சேவைகளைக் பாராட்டி நாட்டின் நான்காவது மிக உயாிய விருதான பத்மஸ்ரீ விருதினை கோவா்தன் குமாரிக்கு இந்திய அரசாங்கம் 2007 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.[18]
Remove ads
படத்தொகுப்பு
- திருமண நிகழ்ச்சியொன்றில் ஒரு பெண்ணின் கூமர் நடனம்
- ஓர் ராஜபுத்திரப் பெண்ணின் கூமர் நடனம்
- ஒரு பெண்ணின் கூமர் நடனம்
மேலும் கான்க
- ராஜஸ்தான் கலாச்சாரம்
- கூமர் (பாடல்)
- கல்பேலியா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads