பத்மாவத்

2018 இந்தித்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பத்மாவத் (Padmaavat')' (முந்தைய பெயர் பத்மாவதி), பத்மாவதி காவியம் திரைப்படமாக, 24 சனவரி, 2018 அன்று மும்பையில் வெளியானது. இந்த இந்தி மொழி திரைப்படத்தை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. நடிகை தீபிகா படுகோண் பத்மாவதியாகவும், நடிகர் ரண்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.[4]

விரைவான உண்மைகள் பத்மாவத், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

1540இல் மாலிக் முகமது ஜெய்சி என்ற சூபிக் கவிஞர் எழுதிய பத்மாவதி காவியம் என்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேவார் கோட்டையை கைப்பற்றிய தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகளிடமிருந்து, தங்களை காத்துக் கொள்ள வேண்டி, ராணி பத்மாவதி உள்ளிட்ட இராசபுத்திர அரச குடும்ப பெண்களும் மற்றும் பணிப்பெண்களும் கூட்டுத் தீக்குளிப்பு செய்து மாண்ட கதையைத் இத்திரைப்படம் விளக்குகிறது.[1] [5][6]

Thumb
Thumb
Thumb
மூன்று முக்கிய நடிகர்கள், தீபிகா படுகோண் (மேல்), சாகித் கபூர் (நடுவில்) மற்றும் ரண்வீர் சிங் (கீழ்).
Remove ads

பிணக்குகள்

இத்திரைப்படத்தின் கதை, இராசபுத்திர குலப் பெண்களின் கண்ணியத்தை குறைப்பதாக உள்ளது எனக் கூறி, மேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பிணக்குகளால், நவம்பர், 2017இல் வெளியாக வேண்டிய இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் தள்ளிப்போயிற்று.[7][8][9]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads