கெம்பாஸ் பாரு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கெம்பாஸ் பாரு தொடருந்து நிலையம்map
Remove ads

கெம்பாஸ் பாரு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kempas Baru Railway Station; மலாய்: Stesen KTMB Kempas Baru) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், கெம்பாஸ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கெம்பாஸ் பாரு, பொது தகவல்கள் ...

கெம்பாஸ் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், கெம்பாஸ் பாரு என இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. மலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[2]

இந்த நிலையம் மறுசீரமைக்கப்பட்டு 6 பிப்ரவரி 2024-இல் திறக்கப்பட்டது.[3]

Remove ads

பொது

1909-ஆம் ஆண்டில், மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (Federated Malay States Railways) எனும் தொடருந்து அமைப்புக்காக கெம்பாஸ் தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. பின்னர் இந்த அமைப்பு மலாயா தொடருந்து நிர்வாகம் (Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.[4]

அப்போது அந்த நிலையம், தற்போதைய நிலையத்திலிருந்து சுமார் 100 தொலைவில் கட்டப்பட்டது. இருப்பினும் கெம்பாஸ் லாமா தொடருந்து நிலையம் ஜப்பானியர்களால் இரண்டாம் உலகப் போரில் அழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையம் இடிக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டது.

மலாயா தொடருந்து நிறுவனம்

அண்மையக் காலத்தில்தான், மலாயா தொடருந்து நிறுவனம், புதிய தொடருந்து நிலையத்தைக் கட்ட உத்தரவிட்டது. கெம்பாஸ் பாரு என புதிய நிலையத்திற்கு பெயர் தேர்வு செய்யப்பட்டது.

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது.[5]

Remove ads

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கல் திட்டம்

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக புதிய கெம்பாஸ் பாரு நிலையம் கட்டப்பட்டது.

புதிய கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள மற்ற தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[6]

மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[7]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads