கெம்மண்ணுகுண்டி

From Wikipedia, the free encyclopedia

கெம்மண்ணுகுண்டி
Remove ads

கெம்மண்ணுகுண்டி (Kemmangundi, கன்னடம்: ಕೆಮ್ಮಣ್ಣುಗುಂಡಿ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூரு மாவட்டத்தில் தரிகெரெ வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழ்விடம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1434 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நான்காம் கிருஷ்ணராஜ உடையாருக்கு கோடை ஓய்வுத்தலமாகவும், அரசருக்கான மரியாதை பெற்ற இடமாகவும் இது இருந்ததால், ஸ்ரீ கிருஷ்ணராஜேந்திரா மலை வாழ்விடம் என்றும் இது அறியப்படுகிறது. பாபா புடான் மலைத் தொடரால் சூழப்பட்டு வெள்ளி அருவிகள், மலை ஓடைகள் மற்றும் பசுமையான தாவரங்களால் நிறைந்த கெம்மண்ணுகுண்டி அழகான தோட்டங்களும், மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த இயற்கை அழகு நிறைந்த இடம். கடுநடை, மலையேற்றம் ஆகியவற்றுக்கும் பல சிகரங்களும் அடர்ந்த காட்டுப் பாதைகளும் உள்ள இடம்.[1][2][3]

Remove ads

பெயர் மூலம்

கெம்மண்ணுகுண்டி (அல்லது கெம்மண்ணகண்டி) என்ற பெயர் மூன்று கன்னடச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும் - கெம்பு (சிவப்பு), மண்ணு (மண்) மற்றும் குண்டி (பள்ளம்).

போக்குவரத்து

சாலை

சாலை வழியில், கெம்மண்ணுகுண்டி சிக்கமகளூருவில் இருந்து ஏறத்தாழ 53 கி.மீ. தொலைவிலும் லிங்காதஹல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மிக அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையான என்.எச்-206 (NH-206) அல்லது என்.எச்-48 (NH-48), பெங்களூருடன் இணைக்கிறது. முல்லயநகரி வழியாகவும் ஒரு பாதை இருக்கிறது. இது இயற்கைக் காட்சிகள் நிறைந்த வழியாகும்.

ரயில்

அருகிலிருக்கும் தரிகெரெ தொடர்வண்டி நிலையம் 20-30 கி.மீ. தொலைவில் உள்ளது.

வானூர்தி

மங்களூர் (150 கி.மீ.) மற்றும் பெங்களூர் ஆகியவை அருகிலிருக்கும் வானூர்தி நிலையங்கள் ஆகும்.

Remove ads

வரலாறு

கெம்மண்ணுகுண்டி நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் கோடை ஓய்விடமாய் பெயர் பெற்றது. பின்னர் அவர் அந்த கோடை வாழ்விடத்தை கர்நாடக அரசாங்கத்திற்கு நன்கொடையளித்தார். இப்போது இந்த வாழிடத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கர்நாடக அரசின் தோட்டத் துறை மேம்படுத்தி பராமரித்து வருகிறது.

அடையாளச் சின்னங்கள்

Thumb
கெம்மண்ணுகுண்டி அருகிலிருக்கும் ஒரு முகடு.
Thumb
கெம்மண்ணுகுண்டியின் அழகிய நில அமைப்புகளில் ஒன்று
Thumb
கெபி நீர்வீழ்ச்சி

இராச் பவன்

இராச் பவன் கெம்மண்ணுகுண்டியில் அமைந்திருக்கும் ஒரு விருந்தினர் இல்லம் ஆகும். சுற்றியிருக்கும் மலைகளின் ஒரு அழகிய தோற்றத்தை இது வழங்குகின்றது. இராச் பவனில் இருந்து சூரியன் மறையும் காட்சியைக் காண்பது அழகான ஒன்று.

இசட் உச்சி

இசட் உச்சி (Z point) என்பது கெம்மண்ணுகுண்டியில் உள்ள ஒரு முகட்டுப் புள்ளி ஆகும். ராஜ் பவனில் இருந்து 45 நிமிடங்கள் செங்குத்தாக மலையேறிச் சென்றால் இந்த இடத்தை எட்டலாம். காலையில் கதிரவன் எழுச்சியைக் காண மக்கள் விரும்பும் இடமாக இது உள்ளது. நடந்துதான் போக முடியும் என்பதால் வழுக்கும் சாலைகள் குறித்தும் பாம்புகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும் என்பர். கெம்மண்ணுகுண்டி அருகில் உள்ள சாந்தி நீர்வீழ்ச்சியும் மக்கள் பார்க்கும் ஓரிடம்.

உரோசாத் தோட்டம்

உரோசாத் தோட்டம் என்பது அதன் பெயர் குறிப்பிடுவதைப் போல உரோசாக்கள் நிறைந்த தோட்டமாகும். இது அரசின் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. பல்வேறு வகையான ரோசாக்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

கெபி நீர்வீழ்ச்சி

இராச் பவனில் இருந்து சுமார் 8 கி.மீ. மலையில் கீழே இறங்கி வந்தால் ஒருவர் ஹெபி நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்கு 168 மீ உச்சியில் இருந்து நீர் இரண்டு பிரிவுகளாய் விழுந்து டோடா ஹெபி (பெரு நீர்வீழ்ச்சி) மற்றும் சிக்கா ஹெபி (சிறு நீர்வீழ்ச்சி) ஆகிய இரண்டையும் உருவாக்குகிறது.

கல்லாத்தி நீர்வீழ்ச்சி

கல்லாத்தி நீர்வீழ்ச்சி கெம்மண்ணுகுண்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கெம்மண்ணுகுண்டியில் இருந்து தரிகெரெ செல்லும் சாலையில் பிரியும் ஒரு பாதை கல்லாத்தி நீர்வீழ்ச்சி க்கு இட்டுச் செல்லும். கல்லாத்திகிரி நீர்வீழ்ச்சி மற்றும் காளஹஸ்தி நீர்வீழ்ச்சி என்றும் இது அழைக்கப்படுகிறது. 122 மீட்டர்கள் உயரத்தில் இருந்து விழும் நீர் அருவிகளும் இங்கிருக்கும் கோவிலும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. இந்து முனிவரான அகத்தியருடன் இந்த இடம் தொடர்புபட்டது என்று உள்ளூரின் பழம்பெரும் மனிதர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

முல்லயாநகரி

முல்லயாநகரி கர்நாடகாவில் அமைந்திருக்கும் மிக உயர்ந்த இடம் ஆகும். கெம்மண்ணுகுண்டியில் இருந்து பாபா புடான்கிரி மலை வழியாக சிக்கமகளூர் நோக்கி போகவும் வழி உள்ளது. சிக்கமகளூரை அடையும் முன்னதாக, இந்த மலை உச்சியை நோக்கிய ஒரு பாதை பிரிகிறது. இந்த பிரியும் பாதையில் இன்னும் 8 கி.மீ. பயணம் செய்தால் மலை உச்சியில் சிவன் கோவில் ஒன்று உள்ளது.

Remove ads

கால நிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Kemmanagundi, மாதம் ...
Remove ads

குறிப்புதவிகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads