கெர்சன் நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெர்சன் (Kherson) என்பது உக்ரைன் நாட்டின் தெற்கில் அமைந்த கெர்சன் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கெர்சன் நகரம் கருங்கடல் மற்றும் தினேப்பர் ஆற்றின் ஒரு முக்கியமான துறைமுகமாகும், மேலும் இது ஒரு பெரிய கப்பல் கட்டும் தொழிலின் தாயகமாகும். 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 294,941 பேர் கொண்டுள்ளது. நடாலியா போபோவிச் தலைமையிலான கிரிமியாவில் உக்ரேனிய அதிபரின் பிரதிநிதியின் அலுவலகம் 2014 முதல் கெர்சனில் உள்ளது.[3]

Remove ads
வரலாறு

கெர்சன் என்ற பெயர் கிரிமியாவின் தென்மேற்கு பகுதியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க காலனியான செர்சோனெசோசின் சுருக்கமாகும். கெர்சன் கோட்டையின் முதல் கட்டிடங்களில் ஒன்று செயின்ட் கேத்தரின் தேவாலயம் ஆகும். அங்கு பொட்டெம்கின் இறுதியில் அடக்கம் செய்யப்பட்டார். கடைசி தார்பன் 1866 இல் கெர்சன் அருகே பிடிபட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, கெர்சன் 1941 ஆகஸ்ட் 21 முதல் 1944 மார்ச் 13 வரை ஜெர்மன் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டின் உக்ரேனிய புரட்சியின் போது, இந்த நகரம் அதிபர் இயானுகோவிச்சிற்கு எதிரான கலவரத்தின் ஒரு காட்சியாக இருந்தது, இதன் போது நகரத்தின் முக்கிய லெனின் சிலை எதிர்ப்பாளர்களால் கவிழ்க்கப்பட்டது. புரட்சிக்குப் பிறகு நகரம் ஒப்பீட்டளவில் அமைதியானது.
Remove ads
மக்கள் தொகை
இனம்
1926 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கெர்சனுக்குள் வாழும் இனக்குழுக்கள் உக்ரேனியர்கள் - 36%, உருசியர்கள் - 36%, யூதர்கள் - 25%, பெலோருசியர்கள் - 0.2% மற்றும் ஜெர்மானியர்கள் - 0.4% என்ற என்ற எண்ணிக்கையில் இருந்துள்ளனர். சமீபத்திய 2001 உக்ரேனிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கெர்சனுக்குள் வாழும் இனக்குழுக்கள் உக்ரேனியர்கள் - 76.6%, உருசியர்கள் - 20.0% மற்றும் பிற இனங்கள் - 3.4% என்ற எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
Remove ads
நிர்வாக பிரிவுகள்
நகரம் மூன்று பிரிவுகளாகப் பிரிகப்பட்டுள்ளன.
காலநிலை
கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ், கெர்சன் ஈரப்பதமான காலநிலையை கொண்டுள்ளது.[5]
போக்குவரத்து
ரயில்
கெர்சன் உக்ரைனின் தேசிய இரயில் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கியேவ், எல்விவ் மற்றும் பிற நகரங்களுக்கு தினசரி நீண்ட தூர சேவைகள் உள்ளன.
வான்வழி
கடவுச்சீட்டு மற்றும் சுங்கக் கட்டுப்பாடு இரண்டையும் வழங்கும் கெர்சன் சர்வதேச விமான நிலையம் மூலம் கெர்சனுக்கு விமான சேவை கிடைக்கிறது. இது 2,500 x 42 மீட்டர் கான்கிரீட் ஓடுபாதையில் இயக்குகிறது, இதில் போயிங் 737, ஏர்பஸ் 319/320 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளன.
Remove ads
கல்வி
77 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகள் உள்ளன. உயர்கல்வி நிறுவனங்கள் 15 உள்ளன. இதில் கெர்சன் மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகம், கெர்சன் மாநில பல்கலைக்கழகம், கெர்சன் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சர்வதேச வணிக மற்றும் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.
முக்கிய இடங்கள்
1780 களில் இவான் இசுதரோவின் வடிவமைப்புகளுக்காக புனித கேத்தரின் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது, மேலும் இளவரசர் பொத்தெம்கின் கல்லறையும் இதில் உள்ளது. யூத கல்லறை ஒன்று உள்ளது. கெர்சனில் பெரிய யூத சமூகம் உள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்பட்டது.[6]
1959 முதல் 1990 வரை கெர்சனில் ஜெப ஆலயம் இல்லை. அப்போதிருந்து, யூதர்கள் மற்றும் கெர்சன் மக்கள் ஆகிய இருவரும் சமாதான சூழ்நிலையில் வளர்ந்திருக்கிறார்கள்.[7] ஆயினும் கூட, யூத கல்லறை தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கல்லறைகள் மீண்டும் மீண்டும் குப்பைகளால் மூடப்பட்டு கல்லறைகள் அழிக்கப்பட்டன. ஏப்ரல் 6, 2012 அன்று, யூத நாட்காட்டியில் மிக முக்கியமான பண்டிகையான பஸ்கா பண்டிகையையொட்டி யூத கல்லறையில் அழிப்பு வேலைகள் ஏற்பட்டது. வேண்டுமென்றே அமைக்கப்பட்ட இந்த தீ உடனடியாக சுமார் 700 சதுர மீட்டர் பரப்பளவில் பரவி கல்லறைகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.[8]
கெர்சன் தொலைக்காட்சிக் கோபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கட்டுமானம் ஆகும். அதிசியோகல் கலங்கரை விளக்கம் ஒரு அதிபரவளைவு அமைப்பு ஆகும். இதை 1911 இல் வி. ஜி. சுக்கோவ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
Remove ads
2022 உக்ரைன் மீதான் உருசியாவின் படையெடுப்பு
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பில் கெர்சன் நகரத்தின் முழுக் கட்டுப்பாட்டை 3 மார்ச் 2022 அன்று உருசிய இராணுவம் எடுத்துக் கொண்டதாக இந்நகர மேயர் கூறுகிறார்.[9]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads