கருங்கடல்
நடுநிலக் கடலுக்கு வடகிழக்கே யுரேசியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாரா கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணையூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் 422,000 கி.மீ.3 பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கி.மீ.3 ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கி.மீ.3 நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் (Danube) ஆறு ஆகும்.
கருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், துருக்கி, பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா என்பனவாகும். கிரீமியன் தீவக்குறை ஒரு உக்ரைனியன் தன்னாட்சிக் குடியரசு ஆகும்.
இஸ்தான்புல், பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், ஸொன்குல்டாக் என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.
கருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கி.மீ. (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) [2] அதிகபட்ச ஆழம்,[3] மற்றும் 547.000 கி.மீ. 3 (131,000 மைல்). [[4] கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கி.மீ. (730 மைல்) ஆகும்.
கடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக கடல் அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு ஏரியாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், மத்தியதரைக்கடல் பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.


Remove ads
மக்கள் தொகை
கருங்கடலைச்சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நகரங்களில் மிக அதிக அளவிலான மக்கள் வசிக்கிறார்கள்.
Remove ads
பெயர்
தற்காலப் பெயர்கள்
தற்போதைய வழக்கமாக ஆங்கில பெயரான "Black Sea" க்கு நிகரான அர்த்தத்தை கொடுக்கும் பல பெயர்கள் கருங்கடல் எல்லைக்குட்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன[12].
- அபுகாசிய மொழி (Амшын Еиқәа, IPA: [ɑmʃɨn ɛjkʷʰɑ])
- ஏடிகிய மொழி (Хы шӏуцӏэ, IPA: [xə ʃʼəw.t͡sʼa]), Axən (Ахын)
- பல்கேரிய: Cherno more (Черно море,
- கிரிமியத் தத்தார் மொழி (Къара денъиз,
- சியார்சிய: Shavi zghva (შავი ზღვა,
- லாசிய மொழி (უჩა ზუღა, Zugha (ზუღა, "Sea")
- ரொமானிய மொழி (pronounced [ˈmare̯a ˈne̯aɡrə] (
listen))
- உருசியம்: Chyornoye more (Чёрное мо́рe, பஒஅ: [ˈtɕɵrnəjə ˈmorʲɪ]
- துருக்கியம்: Karadeniz (IPA: [kaˈɾadeniz])
- உக்ரைனியன்: Chorne more (Чорне море, IPA: [ˈtʃɔrnɛ ˈmɔrɛ])
இத்தகைய பெயர்கள் 12 வது மற்றும் 13 வது நூற்றாண்டிற்கு முன்னர் வரை புழக்கத்தில் காணமுடியவில்லை என்றாலும் இவை கனிசமாக பழமையானவை. ஆயினும் கிரெக்க மொழியில் வேறு பொருள் படக்கூடிய பெயரில் கருங்கடலானது அழைக்கப்படுகிறது.
- கிரேக்க மொழி: Eúxeinos Póntos (Eύξεινος Πόντος);நிலையான பயன்பாடு Mavri Thalassa (Μαύρη Θάλασσα) பேச்சு வழக்கில் குறைவான பயன்பாடு.
நிறங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு கடல்களில் கருங்கடல் ஒன்றாகும். மற்றவை செங்கடல், வெள்ளை கடல் மற்றும் மஞ்சள் கடல் ஆகும்.
Remove ads
நீர் வள இயல்
கருங்கடல் ஒரு குறு கடல் ஆகும்.[13] வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை.[14]
சூழலியல்
கருங்கடல் உப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் சுற்றுச்சூழலில் வாழக்கூடிய உயிரினங்களை ஆதரிக்கிறது. அனைத்து கடல் உணவு வலைகளுக்குள் போல, கருங்கடல் இரு கசை உயிர்கள் உட்பட தான்வளரி பாசிகளை முதன்மை தயாரிப்பாளர்களாக கொண்டுள்ளது.
மிதவை தாவர உயிரிகள்
- இரு கசை உயிர்கள்
- இருகலப்பாசி
- நீலப்பச்சைப்பாசி
அழியக்கூடிய நிலையில் உள்ள விலங்கு இனங்கள்
- வரிக்குதிரை சிப்பி
- கெண்டைமீன் (குடும்பம்)
நவீன பயன்பாடு
வர்த்தக பயன்பாடு
துறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள்
சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக துறைமுகங்கள் இருந்தன. (உக்ரைனில் 12 உட்பட).[15]
வணிக கப்பல் போக்குவரத்து
மீன்பிடித்தல்
எரிவாயு ஆராய்ச்சி பணிகள்
1980 களில் இருந்து, சோவியத் ஒன்றியம் கடலின் மேற்கு பகுதியில் (உக்ரைன் கடற்கரை பக்கத்தில்) பெட்ரோலிய அகழ்வாராய்ச்சியை தொடங்கியது .
விடுமுறை தளம்

பனிப்போரின் முடிவை தொடர்ந்து, ஒரு சுற்றுலாதலமாக கருங்கடலின் புகழ் அதிகரித்துள்ளது. கருங்கடலின் சுற்றுலா இப்பகுதியின் வளர்ச்சி துறைகளில் ஒன்றாக மாறியது[16].
கருங்கடலின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பெயர்கள்
- 2 மாய் (ரொமேனியா)
- அசிசியா (ரொமேனியா)
- அஹ்தோபோல் (பல்கேரியா)
- அமசுரா (துருக்கி)
- அகக்லியா சியார்சியா
- அனபா (ரசியா)
- அல்பேனா (பல்கேரியா)
- அலுப்கா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- அலுசுதா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- பால்சிக் (பல்கேரியா)
- பத்துமி (பல்கேரியா)
- புர்காசு (பல்கேரியா)
- பயலா (பல்கேரியா)
- அவுரோரா முனை (ரொமேனியா)
- சாக்வி சியார்சியா
- ஹெலினா மற்றும் கான்சுன்டான்டைன் (பல்கேரியா)
- கான்சுட்டான்டா (ரொமேனியா)
- கொர்பு (ரொமேனியா)
- காசுநெசுடி (ரொமேனியா)
- இபோரி (ரொமேனியா)
- எமோனா (பல்கேரியா)
- யூபடோரியா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- போரோசு (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- பியடோசியா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- கிரீசன் (துருக்கி)
- காக்ரா சியார்சியா
- ஜெலென்சிக் (ரசியா)
- கோல்டன் சான்ட்சு (பல்கேரியா)
- கோனியோ (பல்கேரியா)
- குர்சுப்பு (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- கோப்பா (ஆர்ட்வின்,துருக்கி)
- இசுத்தான்புல் (துருக்கி)
- சுபிட்டர் (ரொமேனியா)
- கமிச்சியா தங்கும் விடுதி (பல்கேரியா)
- கவர்னா (பல்கேரியா)
- கிடென் (பல்கேரியா)
- கொபுலேடி சியார்சியா
- கொக்டெபில் (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- லொசெனெட்சு (பல்கேரியா)
- மமையா (ரொமேனியா)
- மங்கலியா (ரொமேனியா)
- நவோதரி (ரொமேனியா)
- நெப்துன்(ரொமேனியா)
- நெசிபார் (பல்கேரியா)
- நெவெரோசியிசுயிசுக் (ரசியா)
- ஒர்து (துருக்கி)
- ஒப்சோர் (பல்கேரியா)
- ஒதீசா (உக்ரைன்)
- ஒலிம்ப் (ரொமேனியா)
- பிட்சுந்தா சியார்சியா
- பொமெரியெ (பல்கேரியா)
- பிரிமொர்சுக் (பல்கேரியா)
- சிசி (துருக்கி)
- ருசால்கா (பல்கேரியா)
- ம்சாசன் (துருக்கி)
- சதுர்ன்(ரொமேனியா)
- சினொப் (துருக்கி)
- சோச்சி (ரசியா)
- சோசோபோல் (பல்கேரியா)
- சுடக் (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- சுகடோவ்சுக் (உக்ரைன்)
- சுலினா (ரொமேனியா)
- சூரியக் கடற்கரை (பல்கேரியா)
- சைல் (துருக்கி)
- சிவேட் வ்லாசு (பல்கேரியா)
- திரப்சான் (துருக்கி)
- சிகிசுதுசுரி சியார்சியா
- தௌப்சு (ரசியா)
- உரேகிசியார்சியா
- வமா வெச்சி (ரொமேனியா)
- வர்னா (பல்கேரியா)
- வீனசு (ரொமேனியா)
- யால்டா(ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)
- சொங்குல்டக் (துருக்கி)
நவீன இராணுவ பயன்பாடு
ஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ பயன்பாடு [தொகு] 1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன.[17]
- சொறிமுட்டை, ரோமானிய கடற்கரை அருகில்
- கடற் சாமந்தி, ரோமானிய கடற்கரை அருகில்
- கடற் சாமந்தி, ரோமானிய கடற்கரை அருகில்
- கோபி, ரோமானிய கடற்கரை அருகில்
- ஸ்டிங்க்ரே, ரோமானிய கடற்கரை அருகில்
- ஆட்டுமீன், ரோமானிய கடற்கரை அருகில்
- துறவி நண்டு, ரோமானிய கடற்கரை அருகில்
- நீல கடற்பாசி, ரோமானிய கடற்கரை அருகில்
- முள் நாய்மீன்
- கடற்குதிரை, ரோமானிய கடற்கரை அருகில்
Remove ads
குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads