கெர்மான் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

கெர்மான் மாகாணம்map
Remove ads

கெர்மான் மாகாணம் (Kerman Province (Persian: استان کرمان, Ostān-e Kermān) என்பது ஈரானின் முப்பத்தோரு மாகாணங்களுள் மிகப்பெரிய மாகாணமாகும். ஈரானின் தென்கிழக்கில் உள்ள இந்த மாகாணத்தின் நிர்வாக மையமாக கெர்மான் நகரம் உள்ளது. 2014 இல் இந்த மாகாணமானது ஈரானின் ஐந்தாம் வட்டாரத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது.[2] பண்டைய காலத்தில், குறிப்பாக அகாமனிசியப் பேரரசு காலத்தில் இப்பகுதியானது கார்மேனியா எனக் குறிப்பிடப்பட்டது.[3] இது ஈரானின் முதல் பெரிய மாகாணமாக 183,285 km2 (70,767 sq mi) பரப்பளவு கொண்டதாக உள்ளது. இது ஈரானின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 11 சதவிகிதத்தை வகிக்கிறது.[4] மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 3 மில்லியன் (நாட்டில் 9 வது இடம்) ஆகும்.

விரைவான உண்மைகள் கெர்மான் மாகாணம்Kerman Province استان کرمان, நாடு ...
Remove ads

வரலாறும், பண்பாடும்

கெர்மான் மாகாணமானது இங்கு உள்ள பல்வேறு புவியியல் காலங்களைச் சேர்ந்த முதுகெலும்பி புதைபடிவங்கள் இருப்பதன் காரணமாக புதைபடிம ஆய்வாளர்களின் சொர்கமாக உள்ளது.

கெர்மான் மாகாணத்தில் மனிதக் குடியேற்றங்களின் வரலாறு கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது. இந்த பகுதி ஈரானின் பண்டைய பிராந்தியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மதிப்புமிக்க வரலாற்று சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 2500 க்கு முன்பு அறியப்படாத குடியேற்றக்காரர்களால் நிறுவப்பட்ட இடமாக தொல்லியல் ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட இடத்திற்கு சான்றாக மாகாணத்தின் ஜிரோப்ட் பகுதி உள்ளது. ஈரானின் கலாச்சார பாரம்பரிய அமைப்பின் கூற்றுப்படி, கெர்மான் மாகாணம் மொத்தம் 283 வரலாற்றுச் சுவடுகள் மற்றும் தளங்களைக் கொண்டுள்ளது. பண்டைய கைவிடப்பட்ட கோட்டைகளான அர்கா-ஈ பாம் மற்றும் ரையன் கோட்டையகம் போன்றவை 2,000 ஆண்டுகளாக பாலைவனத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

Remove ads

நிலவியல்

மாகாணத்தின் உயரமான பகுதிகளானது ஈரானின் மத்திய மலைத் தொடர்களின் தொடர்ச்சியில் உள்ளன. இந்த மலைத் தொடரானது அஜர்பைஜானில் தொடங்கி எரிமலை மடிப்புகளிலிருந்து நீண்டு, ஈரானின் மத்திய பீடபூமியில் கிளைந்து, பாலூஷ்காந்தில் முடிகின்றது. மாகாணமானது இந்த மலைத்தொடர்களுக்கு இடையில் பரந்த சமவெளிகளை கொண்டுள்ளது. பாகாகார்ட் மற்றும் குஹு-ஈ பானன் மலைகள் இந்த பிராந்தியத்தில் மிகப் பெரியவையாகும். இவை டோக்ரோல், அல்ஜெர்ட், பால்வார், சிராக், அபேரேக், தஹ்ரோட் போன்ற சிகரங்களைக் கொண்டுள்ளன. யாசிலிருந்து கெர்மான் மற்றும் சாலேஹ்-யெ-ஜஸ்மூர் வரை நீண்டுள்ள பகுதிகளானது கடல் மட்டத்திலிருந்து 4501 மீட்டர் உயரமானவையாக உள்ளன. மேலும் குஹ்ர்-இ ஷா 4402 மீட்டர் உயரமானதாக உள்ளது.

மாகாணத்தின் பெரும்பகுதியானது பெரும்பாலும் ஸ்டெப்பி புல்வெளிகள் அல்லது மணல் பாலைவனமாக உள்ளது. இதில் சில பாலைவனச்சோலைகளும் உள்ளன. இப்பகுதியில் பேரீச்சை, தோடம்பழம் (இவை ஈரானில் சிறந்தவை என்று கூறப்படுகிறது) பசுங்கொட்டை போன்றவை விளைவிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் இப்பகுதியின் "கார்மேனியன்" மதுவானது அதன் தரத்திற்காக புகழப்பட்டது [Strabo XV.2.14 (cap. 726)]. இந்த மாகாணமானது அதன் பாசனத்திற்காக குனான்கள் என்னும் நிலத்தடி நீர் வழிகளை சார்ந்துள்ளது. மாகாணத்தின் நடுப்பகுதியான ஹெஸார் மலையின் உச்சியானது, கடல் மட்டத்திலிருந்து 4501 மீட்டர் உயரத்தில் உள்ளது.

Remove ads

மாவட்டங்கள்

கெர்மான் மாகாணத்தின் மாவட்டங்களாக ருப்சன்ஜான் கவுண்டி, அபர்ணாபாத் கவுண்டி, ராப்சன் கவுன், ராபர்ட் கவுண்டி, சிரான் கவுண்டி, ஷர்ர்-இ-பாபாக் கவுண்டி, கெர்மான் கவுண்டி, ரபார் கவுண்டி, ஆர்ஜிய்யூ கவுண்டி, ஃஹஹ்ராஜ் கவுண்டி, ஃபரியப் கவுண்டி, ரவார் கவுண்டி போன்றவை உள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads