கேஎல்ஐஏ T1 நிலையம்

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய விரைவுத் தொடருந்து இணைப்பு நிலையம் 1 From Wikipedia, the free encyclopedia

கேஎல்ஐஏ T1 நிலையம்
Remove ads

கேஎல்ஐஏ T1 நிலையம் அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய விரைவுத் தொடருந்து இணைப்பு நிலையம் 1 (ஆங்கிலம்: KLIA T1 ERL Station (KLIA); மலாய்: Stesen ERL KLIA; Stesen ERL Kuala Lumpur International Airport) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (இஆர்எல்) (Express Rail Link) (ERL) நிலையமாகும்.[1]

விரைவான உண்மைகள் KE2 KT5 கேஎல்ஐஏ T1 நிலையம் | வானூர்தி இணைப்பு நிலையம் KLIA T1 ERL Station, பொது தகவல்கள் ...

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையக் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேஎல்ஐஏ T1 நிலையத்திற்கு, விரைவுத் தொடருந்து இணைப்பின் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit) எனும் வழித்தடங்களின் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.[2]

Remove ads

பொது

1998-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஒரு முதன்மை வானூர்தி முனையம் (Terminal) உள்ளது. அந்த வானூர்தி முனையத்தில் ஒரு தொடருந்து நிலையமும் உள்ளது. அதற்குப் பெயர்தான் 'கேஎல்ஐஏ T1 நிலையம்'.

சிப்பாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் தொடருந்து நிலையம் முன்பு கேஎல்ஐஏ நிலையம் என்று அழைக்கப்பட்டது. தற்போது 'கேஎல்ஐஏ T1 நிலையம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த வானூர்தி தொடருந்து நிலையம்தான் முதன்முதலில் கட்டப்பட்டது. தற்போது இந்த வானூர்தி முனையத்திற்கு வழங்கப்படும் சேவைக்கு இஆர்எல் சேவை (Express Rail Link) (ERL) எனப் பெயர் வழங்கப்பட்டு உள்ளது.

Remove ads

கேஎல்ஐஏ 1 நிலையம்

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் கட்டும் போதே முதல் இஆர்எல் சேவை தொடருந்து நிலையத்தையும் கட்டிவிட்டார்கள். அதன் அப்போதைய பெயர் கேஎல்ஐஏ 1 நிலையம். தற்போது கேஎல்ஐஏ T1 நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2014 மே 2-ஆம் தேதி மலிவுவிலை வானூர்திச் சேவைகளுக்காக (Low Cost Carrier Terminal) (LCCT) ரிங்கிட் 4 பில்லியன் செலவில், அசல் வானூர்தி நிலையத்திற்கு 2 கிமீ அப்பால் இரண்டாவது வானூர்தி முனையம் கட்டப்பட்டது. அந்த முனையத்திற்காக மற்றும் ஒரு புதிய தொடருந்து நிலையமும் கட்டப்பட்டது. அந்த நிலையத்தின் தற்போதைய பெயர் கேஎல்ஐஏ T2 நிலையம் (KLIA T2) ஆகும்.

Remove ads

நடைமேடைகள்

கேஎல்ஐஏ T1 நிலையம்; மற்றும் கேஎல்ஐஏ T2 நிலையம் ஆகிய இரு நிலையங்களையும் இணைப்பதற்கு இரண்டு தொடருந்து நடைமேடைகள் உள்ளன. நடைமேடை A (Platform A); மற்றும் நடைமேடை B (Platform B) என பெயர் வழங்கப்பட்டு உள்ளது. நடைமேடை A என்பதை கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து பயன்படுத்துகிறது; நடைமேடை B என்பதை கேஎல்ஐஏ போக்குவரத்து பயன்படுத்துகிறது.

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads