கேடா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேதா அல்லது கைரா (Kheda or Kaira) இந்தியாவின், குஜராத் மாநிலத்தின், கேதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியுமாகும். அகமதாபாத்திலிருந்து 35 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 கேதா நகரத்தின் வழியாக, மும்பை-அகமதாபாத் நகரங்களை இணைக்கிறது. கேதா நகரம், வட்ராக் மற்றும் சேதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 68 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கேதா, நாடு ...
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மொத்த மக்கட்தொகை 25,575. அதில் ஆண்கள் 13,307, பெண்கள் 12,268 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் உள்ளனர். [1] எழுத்தறிவு விகிதம் 87.72%.

சமுகங்கள்

கேதா நகரத்தில் மற்ற சமுக மக்களை விட ஜாட் சமுக மக்கள் அதிகம் உள்ளனர்.[2].

  • சௌகான், சவாண், [2]
  • கௌர், கொரு கொர்[2]
  • கொடா-கொடாரா[2]
  • குலியா-கலியா[2]
  • மான் - மனார் [2]

போன்ற சாட் இன மக்களும் மற்றும் குஜ்ஜர் இன வோரா/வேரா மக்களும் உள்ளனர்.

வழிபாட்டுத் தலம்

கேதா நகரத்தில் மேல்தி மாதா கோயில் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் ஆண்டுத் திருவிழாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads